தமிழ் பதிவுகளில் அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப பதிவுகளில் ஆங்கில மொழி எந்த அளவுக்கு பாடு படிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்...
தமிழ் பதிவர்களின் தமிழ் ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன் ஆனால் அதே சமயத்தில் ஆங்கில வார்த்தையை நேரடியாக தமிழாக்கம் செய்வது எவ்வளவு கேலிக்குரியது, எவ்வளவு வேதனைக்குரியது. இந்த மாதிரியான மொழிமாற்றம் பெரும்பாலும் தொழில்நுட்ப பதிவுகளில் நாம் அதிகமாக காணலாம்.
அப்படி உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் சிலவற்றை நாம் இங்கு காணலாம்.(இது சாம்பிள் மட்டுமே)
ஆங்கில வார்த்தை | நேரடி தமிழ் வார்த்தை |
VirtualBox | கற்பனையாக்கப்பெட்டி |
Java Runtime Environment(JRE) | ஜாவா நிகழ்நேர சூழல் |
desktop | முகத்திரை |
Mobile station | நகர் நிலையம் |
trensceiver | செலுத்துப்பெறுவி |
இங்கே மேலே குறிப்பிட்ட ஆங்கில வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நேரடியாக தமிழாக்கம் செய்து தமிழ் வாக்கியத்தை அமைக்கிறார்கள். இது எவ்வளவு வேதைனைக்குரியது. உதாரணமாக நகர் நிலையம்(Mobile station/tower). இது மொபைல் போனில் இருந்து வரும் அழைப்பு/தகவலை பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு டவர். அனால் தமிழாக்கத்தில் கொடுக்கபட்டுள்ள சொல்லிற்கு(நகர் நிலையம்) அர்த்தமே வேறு..
இதே மாதிரி தமிழ் வார்த்தை/அல்லது வாக்கியத்தை அர்த்தமற்ற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல் உங்களுக்கு கோபம் வருமா வரதா?
உதா: கொட்டை வடிநீர் என்பதை ஆங்கிலத்தில் 'Nut filtered water' என்று மொழி பெயர்த்தால் அதில் எந்த அர்த்தமும் இருக்காது.
3 idots படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு 3 முட்டாள்கள் என்ற பெயரை விட நண்பன் என்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.
பதிவர்களே இனியாவது அர்த்தமற்ற தமிழாக்கத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
0 திட்டுகள்:
திட்டுங்க.. ஆனா no bad words...