Thursday, December 8, 2011

ஆமை புகுந்த வீடும்.... வடிவேல் புகுந்த கட்சியும்.....

நம்மில் பலர் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழியை சொல்ல கேட்டிருப்போம். இதில் ஆமை என்பது எதை குறிக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. எது எப்படியோ நமக்கு அது

இப்பொழுது முக்கியம் இல்லை.

கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பான செய்தி என்னவென்றால் வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறார் என்பதுவே.

ஏற்கனவே வடிவேலு சேர்ந்த திமுக கட்சியின் நிலைமை, அதன் முன்னாள் அமைச்சர்களின் கதி என்னவென்று அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறாராம்.

அதிமுக கட்சி இப்பொழுது சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளது. அதாங்க விலைவாசி, ஜெ-வின் அடாவடித்தனமான நடவடிக்கையால் மக்களிடம் கெட்ட பெயர் தான் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளது.

எப்படியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி படு தோல்வி அடையபோகிறது.
இந்த நிலைமையில் வடிவேலுவும் அந்த கட்சியில் இணைந்தால் நிலைமை மேலும் மோசம் தான். அப்புறம் அனைவரும் மேலே சொன்ன பழமொழியை மறந்து கீழுள்ள புதுமொழியை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

"ஆமை புகுந்த வீடும், வடிவேல் புகுந்த கட்சியும்____________________________"
நீங்களே கோடிட்ட இடத்தை நிரப்பி கொள்ளவும்.

இந்த புதுமொழிக்கு இடம் தராமல் இப்போதிருக்கும் இடத்திலேயே வடிவேல் இருப்பது தான் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

சிந்திப்பாரா வடிவேலு????



Wednesday, December 7, 2011

நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்....

என்னடா இவரு இப்படிப்பட்ட தலைப்பு வச்சிருக்காருன்னு யோசிக்கிரிங்களா??
நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.... எதற்கு?
மேலே வாசிக்கவும்.

நடிகர் சூர்யா நடித்ததில் வெற்றி பெற்ற படங்கள் மிகவும் கம்மி தான்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக தான் தொடர் வெற்றி போடுகிறார்.
அதற்கு காரணம் சூர்யா அல்ல. சுர்யாவிற்காக மட்டுமே எந்த படமும் ஓடியதில்லை.
இருந்தாலும் அவர் படங்கள் எப்படி வெற்றி பெறுகிறது என்று பார்த்தால் அதற்கு
காரணங்கள் டைரக்டர் or திரைக்கதை or பாடல்கள் or நகைச்சுவை மட்டும் தான் காரணங்கள்.

மௌனம் பேசியதே, காக்க காக்க, நந்தா, அயன் போன்ற படங்களில் அனைத்தும் புதுமுக டைரக்டர்கள் தான்.
இதிலும் மௌனம் பேசியதே மட்டும் தான் அறிமுக இயக்குனர். மற்ற மூன்று படங்கள் அந்த இயக்குனர்களுக்கு இரண்டாம் படம்.
இந்த நான்கு படங்களும் அதில் இருந்த திரை கதைக்காக ஓடியவை. மேலே சொன்ன நான்கு படங்கள் தவிர சூர்யாவின் மற்ற வெற்றி படங்கள் அனைத்திலும் நல்ல திரைக்கதையும் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களும் தான்.

ஆகா சுர்யவிற்காக ஓடிய படங்களே இல்லை என்று சொல்லலாம்.

மாறாக விஜய் நடித்ததில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ், கில்லி, காவலன் தவிர அனைத்து வெற்றி படங்களிலும் அறிமுக இயக்குனர்கள் தான். போக்கிரி, வேலாயுதம், சிவகாசி, திருபாட்சி, வேட்டைக்காரன் மற்றும் பல
படங்கள் விஜய்காக மட்டுமே ஓடியவை. விஜய் பட தொகுப்பை இங்கே காணலாம்.
பல படங்கள் நல்ல திரைக்கதை இல்லாமல் அனுபவ இயக்குனர் இல்லாமல் வெற்றி பெற்றவை.

அஜித்தின் படங்களும் கிட்ட தட்ட விஜய் படங்கள் மாதிரி தான். அஜித்மற்றும் விஜய் இடையேயான
ஒப்பிட்டுக்கு என்னுடைய முந்தய பதிவுகளை பார்க்கவும்.

நல்ல திரைக்கதை இல்லை என்றால் சூர்யா படம் மிகப்பெரிய வெற்றி அடைவது கஷ்டம் தான்.
உதாரணமாக 'ஏழாம் அறிவு'.

இப்பொழுது உங்களுக்கே தெரிந்திருக்கும் சூர்யா எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.
அட இன்னுமா தெரியவில்லை அதாங்க 'மாஸ் ஹீரோ' என்ற அடைமொழிக்கு சரிப்பட்டு வரமாட்டார்.




Monday, December 5, 2011

தமிழின் வியத்தகு மாண்புகள்



இருநூறு கோடியை லஞ்சமாகப் பெற்ற பலநூறு கோடியே…!!!

திஹரிலிருந்து வந்த கனிமொழியை நம்ம தமிழர்கள் எப்படி எல்லாம் வரவேற்றார்கள் என்றால்........


இயக்கத்தின் தியாகமே ஏழை மக்களின் இதயமே!!!! வருக வருக.......

இனி நீ பூங்கொடி அல்ல போர்க்கொடி........

சூழ்ச்சி மேகங்களை சுட்டெரித்து வரும் சூரிய கதிரே வருக வருக.......

அக்னி பரிட்சையில் வென்று வரும் அகல் விளக்கே வருக வருக.......

பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது
நல்ல மனம் படைத்தோரின் வாழ்த்து பலித்தது
சதிகார கூட்டத்தின் கனவு கலைத்தது
உன் நலன் நாடும் தமிழ் உள்ளங்கள் மகிழ்ந்தது வருக வருக.......

நியாயங்கள் தோற்பதில்லை
நீதி சூரியன் மறைவதில்லை

நீ தனி மரம் அல்ல தோப்பு
நீ வெல்வது காலத்தின் தீர்ப்பு

சங்கமம் கண்டவள் நீ - நாளை
சரித்திரம் படிப்பவள் நீ

ஏழைகளின் தோழி நீ
எழுச்சி சூரியனாய் வாழி நீ....

சோதனை பொருத்தாய் தண்டனை பொருத்தாய்
பொறுத்தார் பூமி ஆழ்வார்

எறும்புக்கும் தீங்கு இளைக்காத உனக்கு
இத்தனை துயரங்கள் எதற்கு???

உன் ஒவ்வொரு காயங்களும்
உன் ஒவ்வொரு வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன....

கலைஞரின் திருமகளே வருக.......
கழகத்தின் தமிழ்மகளே வருக.......
எதையும் தாங்கும் இதயமே வருக.......
எதிர்கால ஒளிமயமே வருக....... வருக.......

உனக்கு பூ-போன்ற மனம் அது
எஃகுவாக உருபெற்றது இன்றைய தினம்.

சதியை உடைத்து வரும் உண்மை போராளியே வருக....... வருக.......

போதும்டா சாமி... இப்பவே கண்ணா கட்டுதே...
இனி கீழே வருவது போஸ்டரில் இல்லாதது


ஓ.பி.சைனியின் முகத்தில் கரியைப் பூசிய ஸ்பெக்ட்ரம் ராணியே …!!!

சிபிஐ குற்றப் பத்திரிக்கையை மஞ்சள் பத்திரிக்கையாக்கிய மாதரசியே …!!!

திஹார் சென்ற பூம்புகாரே …!!!

கருணாநிதி பெற்றெடுத்த பூலான் தேவியே …!!!

சர்க்காரியா நாயகன் பெற்ற சர்க்கரை நாயகியே …!!!

ராசா முதுகில் குத்திய ராஜகுமாரியே …!!!

அஞ்சுகத்தின் பேத்தியான அலைக்கற்றையே.. …!!!

தென்னகத்து நீரா ராடியாவே …!!!

சங்கமம் நடத்திய குங்குமமே …!!!

தமிழினத்தில் வேலியே…

ஜாபர் சேட்டின் தோழியே.. …!!!

ராசாத்தி பெற்றெடுத்த ரங்கராட்டினமே.. …!!!

அறிவாலயத்தைக் காக்க வந்த அருபெரும் தலைவியே… …!!!

இருநூறு கோடியை லஞ்சமாகப் பெற்ற பலநூறு கோடியே… …!!!






நன்றி: சவுக்கு


Sunday, December 4, 2011

அஜித்தின் 100-வது படம் மாரியாத்தா-வின் கதை சுருக்கம்.....

தல அஜித் நடிக்கவிருக்கும் 100-வது படமான மாரியாத்தா-வின் கதை கசிந்து இன்டர்நெட்டில் பல பதிவர்களால் பதிவாக எழுத பட்டுள்ளது.
நீங்கள் படிக்கவில்லை என்றால் உங்களுக்காக கீழே.

கரு: மாரியாத்தா கோவில் கூழ் அண்டாவை ஆட்டைய போடுவது
Cast:
அஜித்: சஸ்பெண்டு செய்யப்பட்ட சமையல்காரர்
அர்ஜுன்: தலைமை சமையல்காரர்(chief cook)
பிரேம்ஜி: மாரியாத்தா கோவிலில் பிட்சை எடுக்கும் பிச்சைகாரர்
மற்றும் பலர்.

படம் ஆரம்பிக்கும் போது அஜித் raymond கோட் சூட் போட்டுகொண்டு ஒரு கல்யாணத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அனைவரையும் அடித்து ஒருவரை காப்பாற்றுகிறார். (காப்பாற்றபட்டவர் மாரியாத்தா கோவில் தர்மகர்த்தாவின் வேலையாள்). சமையல் செய்யும் போது அடிதடியில் இறங்கியதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

அது மார்கழி மாதம் என்பதால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாரியாத்தா கோவிலில் கூழ் உத்துகிரார்கள். அப்பொழுது அங்கு வரும் ஒரு 7star ஹோட்டல் அதிபர் கூழை சுவைக்கிறார். அவருக்கு அதன் சுவை மிகவும் பிடித்து போகவே சமையல்காரரான அஜித்தை அழைத்து கூழ் பண்ணி தர முடியுமா என்கிறார். ஒரு அண்டாவிற்கு 10 கோடி ரூபாய் விலை பேசுகிறார்.

கூழ் சமைக்க தெரியாத அஜித் மாரியாத்தா கோவில் கூழ் அண்டாவை ஆட்டைய போட பிளான் பண்ணுகிறார்.

சில நாட்கள் கழித்து அவர் கோவில் தர்மகர்த்தாவை சந்திக்கிறார். சந்திப்பதற்கு முன்னர் அஜித் தர்மகர்த்தா-வின் பெண்ணை காதலிக்கிறார்.
காதலிக்கும் போது அவர்கள்
கூழ் கூழ் கூழ் உன்னை தேடி அலைந்தேன்..................
என்ற டூயட் பாடலை பாடுகிறார்கள்.

ஒருநாள் மாரியாத்தா கோவிலுக்கு செல்லும் போது மூன்று நபர்கள் அங்கு பிச்சை எடுத்துக்கும் பிரேம்ஜியை இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். பின் தொடரும் அஜித்துக்கு அப்பொழுது தான் தெரிகிறது அவர்களும் கூழ் அண்டாவை ஆட்டைய போட பிளான் பண்ணுகிறார்கள் என்று.
உடனே அஜித்
"சிவாஜி படத்துல ரஜினி அடிச்சா cool......
ஆனா இந்த தல அடிச்சா கூழ்"

அப்படினு டயலாக் பேசிக்கொண்டே அவர்கள் முன்னாடி தோன்றுகிறார். அஜித் அவர்களிடம் எதற்காக பிச்சைகார பிரேம்ஜியை இந்த ஆட்டத்தில் சேர்த்தீர்கள் என்கிறார். அதற்கு பிரேம்ஜி "இன்பர்மேசன் இஸ் வெல்த்" அப்டின்னு பாய்ஸ் பட செந்தில் டயலாக் பேசிக்கொண்டே தான் வைத்திருக்கும் ஐபேட்-ஐ ஆன் செய்து எந்த கோவிலில் எப்பொழுது கூழ் ஊற்றுகிறார்கள் என்று படித்து சொல்கிறார். உடனே அஜித் பிரேம்ஜியின் முதுகில் தட்டிகுடுக்கிறார். உடனே பிரேம்ஜி "மச்சி ஒப்பன் தி பாட்டில்" என்றதும் குத்து பாடல் ஆரம்பம் ஆகிறது.

"உப்பு கருவாடு காச்சி வச்ச கூழு... ஊட்டி விட நீ போதும் எனக்கு.
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்து விட தோணுதடி
எனக்கு.................."

இந்த பாடலை கேட்டதும் chief குக் அர்ஜுனுக்கு கோபம் வருகிறது. அது எப்படி முதல்வன் படத்தில் நான் பாடிய பாடலை அஜித் உல்டா பண்ணலாம் என்று. அஜித்தை பலி வாங்குவேன் என்று சபதம் எடுக்கிறார்.

அனைத்து கோவில்களுக்கும் சென்று கூழை ஆட்டைய போடுவதற்கு நிறைய ஆட்கள் தேவைப்படுமே என்று யோசிக்கும் போது பிரேம்ஜி சொல்கிறார் "எல்லா கோவிலுக்கும் சென்று திருடுவதை விட எல்லா கோவிலுக்கும் சப்ளை செய்யும் குடோனில் இருக்கும் கண்டெய்னரில் இருந்து எளிதாக இருக்கும் ஆட்களை வைத்தே அடிக்கலாம்" என்கிறார். ஐடியா நன்றாக இருக்கவே அதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.
அதன்படி ஓடும் கண்டெய்னரில் இருக்கும் அண்டாவில் ஓட்டை போட்டு ஒரு பைப் மூலமாக வேறொரு அண்டாவுக்கு கூழை ட்ரான்ஸ்பர் செய்கிறார்கள்.
அப்பொழுது அங்கு அர்ஜுன் வருகிறார். அவரை பார்த்ததும் அனைவரும் பயப்படுகிறார்கள். பிரேம்ஜி பீதியில் யூரின் போகிறார்.
உடனே அஜித்
"மூக்குல சளி ஒட்டுனா கிளைமேட் cool....
பட் மீசையில் ஒட்டுனா அது கூழ்
"
என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார். இதை கேட்டதும் அர்ஜுன் தன்னோட கிளாஸ்மேட் தான் அஜித் என்று உணர்கிறார். இருவரும் "நண்பேண்டா" என்று கட்டி அணைக்கிறார்கள்.

படம் முடிகிறது.

ஒய் திஸ் கொலைவெறி டா.... ஆண்களுக்கு சாட்டையடி

இந்த பாடல் வரிகளை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....

Dawn-u கம்மு வி go வொர்க்கு
யு சிட் there-u ஸ்மோக்கு
money கம்மு யு டேக் & spend-u
ஹவ் do ஐ feed the kids-u?

யு say லவ்வு லவ்வு ஓ மை லவ்வு
ஐ showed யு bou-u
but லவ்வு லவ்வு here இஸ் cow-u
இட் கிவ்ஸ் back more than யு
நவ் யு டெல் மீ who இஸ் ரைட்டு
ஆர் யு ஹாப்பி நவ்வு?
திஸ் song இஸ் for ஆல் தி கேர்ள்ல்-u
வி have தி சாய்ஸ்-u

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....

hand-ல knife-u
knife-la blood-u
wife ஆகிட்டா கேர்ள் future-u அவுட்டு

parents பிரஷர்
beyond culture
வி see தி பிக் picture

மை ஹார்ட் ஹார்ட்-u நவ் இஸ் break-கு
இட் இஸ் because of யு
பிரேக்கு பிரேக்கு வாட் எ பிரேக்கு
மை pail இஸ் full of tear-u

இ ஹவ் gave in சோ மச் லவ்வு
யு still கம்ப்ளைன் how-u?
யு வில் நெவெர் அண்டர்ஸ்டேன்ன்டு அவர் plight-u
வாட் ஆம் ஐ to do நவ்வு?

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டா....



Why this kolaveri da? Strong message to all men

Why this kolaveri kolaveri kolaveri da
Why this kolaveri kolaveri kolaveri da

Once we're married hell is life-u
Life-u total out-u
Out-u 0ut-u you say out-u
We stand here hurt-u

Why this kolaveri kolaveri kolaveri da

Dawn-u come-u, we go work-u
You sit there smoke-u
Money come-you take spend-u
How do I feed the kids-u

You say love love o my love I showed u bou-u
But love love here's cow-u
It gives back more than you-u
Now u tell me who is right-u
Are u happy now-u ?
This song is for all girls-u..we have the choice-u

Why this kolaveri kolaveri kolaveri da

Hand-le knife-u
Knife-le blood-u
Girl-u future out-u

Parents pressure
Even culture
We see the bigger picture

My heart heart-u now is break
It is because of you-u
Break break what a break-u
My pail is full of tear-u

I have gave in so much love-u,
You still complain how-u?
You will never understand our plight-u
What am I to do -u


Why this kolaveri kolaveri kolaveri da





To listen this song: http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U1d3dKGb3Eg