Monday, December 12, 2011

திருட்டு VCD-க்கு காரணம் ரஜினி, கமல்??

சினிமாவ நம்பி பலபேரோட பொழப்பு ஓடுது.
சினிமாவ பாத்து பலபேரோட பொழப்பு ஓடுது.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நம் ஹீரோ அப்படி என்ன தான் நடித்திருக்கிறார் என்று படம் பார்ப்பதில் நம் அனைவருக்குமே ஒரு ஆவல் உண்டு.
ஏதோ திருட்டு VCD(DVD) சமாச்சாரத்துக்கு மக்கள் மட்டுமே காரணம் என்று இந்த சினிமாக்காரர்கள் புலம்புகின்றனர்.
இதில் 10% தான் உண்மை. மக்கள் மட்டும் காரணம் இல்லை மக்களும் தான் காரணம்.

இப்பொழுது திருட்டு VCD மேட்டருக்கு வருவோம்.

திருட்டு VCD வாங்குவதினால் இது மக்களிடம் இருந்து தான் ஆரம்பிகின்றது. இதில் அவர்களுக்கு இரண்டு மனநிலை.
நம்ம பணத்தை திருட்டு குடுப்பதா அல்லது அடுத்தவன் பணத்தை திருடுவதா என்று? இன்று சராசரியாக நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க குறைத்து 500 ரூபாய் தேவை. (டிக்கெட் 300, பார்கிங் -50, puff/பாப்கார்ன்/ட்ரிங்க்ஸ் 150). இது பகல் கொள்ளை தான்.
500 ரூபாய் திருட்டு கொடுப்பதா இல்லை 30 ரூபாய் செலவு செய்து திருட்டு VCD வாங்குவதா என்றால் சராசரி நடுத்தர வர்க்கம் இராண்டாவது சாய்ஸ்-ஐ தான் விரும்புவர்.

எதற்காக தியேட்டரில் பகல் கொள்ளை அடிக்கிறார்கள்? அவர்கள் விநியோகஸ்தர்களிடம் நிறைய பணம் கொடுத்து தான் படப்பெட்டியை வாங்குகிறார்கள்.
இதில் விநியோகஸ்தருக்கோ இலாபம் கம்மி தான். இப்படி அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி திரை இட்டால் டிக்கெட் விலையும், ஸ்நாக்ஸ் விலையும் தாறுமாறாக தான் இருக்கும்.

எதற்காக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். தயாரிப்பாளர் இலாபம் கருதி அதிக விலைக்கு விற்றாக வேண்டி இருக்கிறது. தயாரிப்பாளர் ஒன்றும் அதிகமான இலாபம் எதிபர்ப்பதில்லை. எந்த ஒரு தயாரிப்பாளரும் ஹீரோவின் சம்பளத்தை விட கொஞ்சம் அதிகம் இலாபம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
பின்ன என்ன தன்கிட்ட வேலை செய்யும் ஹீரோவை விட முதலாளிக்கு அதிகமாக இலாபம் இருக்க வேண்டும் என்பது நியாயமே.

இப்பொழுதெல்லாம் ஹீரோவின் சம்பளமே ஒரு படத்தின் பட்ஜெட்டில் பெரும் பங்கு வகுக்குகிறது. இதற்கு மேலே ஃபாரின், பைவ் ஸ்டார் ஹோட்டல், பிசினஸ் கிளாஸ் ட்ராவல், லொட்டு லொசுக்கு..

MGR, சிவாஜி காலத்திலெல்லாம் இப்போது போல் சம்பளம் இல்லை. என் அறிவுக்கு எட்டியவரை இந்த அதிகபடியான சம்பளம் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதில் இருந்து தான். ரஜினியின் இன்றைய சம்பளம் ஒரு நடுத்தர IT கம்பெனியின் வருமானத்திற்கு நிகரானது. ரஜினி அளவுக்கு கமலுக்கு வர்த்தகம் இல்லாவிட்டாலும் சமகால நடிகன் என்பதால் தானும் ரஜினி அளவுக்கு சம்பளம் எதிர் பார்க்கிறார். இவர்களைதான் மற்ற ஹீரோக்களும் பின் பற்றுகிறார்கள்.
இவர்கள் யாரும் தயாரிப்பாளரை நினைத்து பார்ப்பதில்லை.

எப்படி விலைவாசிக்கு பெட்ரோலின் விலை ஏற்றம் காரணமோ அப்படிதான் திருட்டு VCD-க்கு ரஜினி, கமல் தான் காரணம்.

வெளி இடங்களில் தன்னை ரொம்பவும் எளிமையாக காட்டிகொள்ளும் சூப்பர் ஸ்டார் பணத்தாசையை விட்டு குறைந்த சம்பளித்தில் நடிக்க வந்தால் தமிழ் திரையுலகம் சுடர் விட்டு எரியும். முன் வருவாரா சூப்பர் ஸ்டார்?

Sunday, December 11, 2011

சம்பள உயர்வு பெறுவது எப்படி? பாகம்-2

இந்த பதிவை பாகம் இரண்டாக போட்டிருக்கே பாகம்-1 எங்கே என்று தேடுகிறீர்களா?
பாகம்-1 ஏற்கனவே ஒரு பதிவர் எழுதி விட்டார். அதில் சென்டிமென்டலாக, மிரட்டல் விடுத்து எப்படி சம்பள உயர்வு பெறுவது என்று இருக்கும். என்னிடம் அந்த வலைப்பதிவின் முகவரி இப்பொழுது இல்லை. அதை கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவிக்கின்றேன்.

இந்த பதிவில் எப்படியெல்லாம் காக்கா பிடித்தால் சுலபமாக எப்படி சம்பள உயர்வு கிடைக்கும் என்று பார்க்கலாம்.


1. தினமும் அலுவலகத்தில் மேனேஜரிடம் காலையில் குட்மார்னிங், மாலையில் குட்நைட் கண்டிப்பாக சொல்லவும்

2. மேனேஜர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னரே நாம் அலுவலகத்திற்கு வரவேண்டும். அதேபோல் மேனேஜர் அலுவலகத்திலிருந்து கிளம்பிய பின்னரே கிளம்பவும்

3. மேனேஜர் எப்பொழுதெல்லாம் நம்முடைய இருக்கையை கடந்து செல்கிறாரோ அப்பொழுதெல்லாம் எழுந்து நின்று வணக்கம் வைக்கவும்.

4. மலையிலோ or இரவிலோ மேனேஜர் வீட்டுக்கு கிளம்பும் போது அவருக்கு மறக்காமல் கார் கதவை திறந்து விடவும்

5. நீங்கள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர் என்றால் இரவு 11 or 12 மணிக்கு ஆட்டோமேட்டிக்காக ஈமெயில் அனுப்புவது மாதிரி உங்கள் outlook-ஐ செட் செய்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் ஹார்டு வொர்கர் (hard worker) என்று தெரியும்.

6. தினமுமோ அல்லது வாரத்தில் ஒருமுறையோ மேனேஜரின் மேஜைக்கு அடியில் கால்களுக்கு நடுவில் அமர்ந்து(தேவை இல்லாத கற்பனைகள் வேண்டாம். கெட்ட புத்திபா உங்களுக்கு) மேனேஜரின் ஷூ-க்கு பாலிஷ் போடவும்.

7. மேனேஜர் போட்டோவை பர்சில் வைத்துகொண்டு மேனேஜருக்கு தெரியும்படி அதை அடிக்கடி திறந்து பார்க்கவும்.

8. மேனேஜருக்கு வாக்கிங் போகும் பழக்கம் இருந்தால் நீங்களும் தினமும் அவருடன் வாக்கிங் செல்லவும்.

9. வார இறுதியில் மேனேஜர் வீட்டிற்கு சென்று தேவையான வீட்டு வேலை செய்யவும்

10. அவர் வீட்டில் இருக்கும் நாயை கொஞ்சவும்.

11. மேனேஜருக்கு டீன்ஏஜ் வயதில் பெண் இருந்தால் அவளை சிஸ்டர் என்று அழைக்கவும்.

12. குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று வர புதுப்படத்திற்கு டிக்கெட் எடுத்து தரவும்

13. மறக்காமல் அடுத்தவனை பற்றி போட்டு குடுக்கவும்.


ஏழாம் அறிவு படம் வெற்றி... ஆனால் தோல்வி....

பேக்டரிய டெவெலப் பண்ணுனதில் இருந்து வெண்ணை வேணும் பண்ணு வேணும்னு காலங்காத்தால வந்துடுரானுங்க.
அதே மாதிரி ஏழாம் அறிவு படம் ரிலீஸ் ஆனாலும் ஆச்சு ரிவியு, கமெண்ட், பதிவுன்னு ஆளாளுக்கு எழுத ஆரம்பிச்சுட்டாங்க.

நம்ம பங்குக்கு நாமளும் எதாச்சும் எழுதலேன்னா இந்த பதிவுலகம் நம்மள மன்னிக்காது.
அதனால இந்த பதிவு.

ஏழாம் அறிவு படம் வெற்றி தான் ஆனால் தோல்வி....
அது எப்படி வெற்றிப்படம் தோல்வி ஆகும். ஆபரேஷன் சக்சஸ் பேசன்ட் ஃபெய்லியர் மாதிரி தான்.

ஒரு நல்ல நடிகர், திறமையான இயக்குனர், திறமையான மியூசிக் டைரெக்டர், உலகத்தரம் வாய்ந்த வில்லன், சிறந்த பப்ளிசிட்டி, இதற்கு மேலாக சிறந்த கதை அம்சம் கொண்ட ஒரு படம்தான் ஏழாம் அறிவு.

இதற்கு நேர் மாறாக நடிக்க தெரியாத நடிகர், சொந்தமாக படம் எடுக்க தெரியாத இயக்குனர், சுமாரான மியூசிக் டைரெக்டர், அனைவருக்கும் பரிச்சயமான வில்லன்(அதாங்க நம்ம தளபதி விஜய்), கதையே இல்லாத ஒரு படம் தான் வேலாயுதம்.

கலெக்சன் ரீதியாக இரண்டு படங்களுமே கிட்டதட்ட சரி சமம் தான்.
இதிலிருந்து பார்த்தால் ஏழாம் அறிவு தோல்வி படமே.

அதற்கு மேலாக ஏழாம் அறிவு படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய். இப்பொழுதான் இந்த படம் 80 கோடி ரூபாய் கலெக்சன் செய்திருக்கிறது. இனி எப்பொழுது லாபம் பார்ப்பது?

ஏழாம் அறிவு மக்கள் மத்தியில் வெற்றி அனால் தயரிப்பாரளுக்கோ, சுர்யாவுக்கோ தோல்வி படம் தான்.

Saturday, December 10, 2011

மின் கட்டண உயர்விருந்தாலும் மாதந்திர தொகையில் மாற்றம் இருக்காது... எப்படி?

இன்னும் மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

இந்த கட்டண உயர்வில் இருந்து பொது மக்கள் பாதிக்க படக்கூடாது என்பதற்காக மின் கட்டண உயர்விருந்தாலும் மாதந்திர தொகையில் மாற்றம் இல்லாத ஒரு திட்டத்தை அரசு அதிகாரிகள் தீட்டியுள்ளர்கள்.

அந்த திட்டத்தின் படி மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப அனைத்து ஊர்களிலும் அதிகபடியான நேரம் மின்வெட்டு இருக்கும். இதனால் அதிகபடியான மாதாந்திர கட்டணம் செலுத்துவதிலிருந்து பொது மக்கள் காப்பாற்ற படுவார்கள்.

Thursday, December 8, 2011

ஆமை புகுந்த வீடும்.... வடிவேல் புகுந்த கட்சியும்.....

நம்மில் பலர் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழியை சொல்ல கேட்டிருப்போம். இதில் ஆமை என்பது எதை குறிக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. எது எப்படியோ நமக்கு அது

இப்பொழுது முக்கியம் இல்லை.

கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பான செய்தி என்னவென்றால் வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறார் என்பதுவே.

ஏற்கனவே வடிவேலு சேர்ந்த திமுக கட்சியின் நிலைமை, அதன் முன்னாள் அமைச்சர்களின் கதி என்னவென்று அனைவரும் அறிந்ததே.
இப்பொழுது வடிவேலு அதிமுக-வில் இணைய போகிறாராம்.

அதிமுக கட்சி இப்பொழுது சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளது. அதாங்க விலைவாசி, ஜெ-வின் அடாவடித்தனமான நடவடிக்கையால் மக்களிடம் கெட்ட பெயர் தான் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளது.

எப்படியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி படு தோல்வி அடையபோகிறது.
இந்த நிலைமையில் வடிவேலுவும் அந்த கட்சியில் இணைந்தால் நிலைமை மேலும் மோசம் தான். அப்புறம் அனைவரும் மேலே சொன்ன பழமொழியை மறந்து கீழுள்ள புதுமொழியை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

"ஆமை புகுந்த வீடும், வடிவேல் புகுந்த கட்சியும்____________________________"
நீங்களே கோடிட்ட இடத்தை நிரப்பி கொள்ளவும்.

இந்த புதுமொழிக்கு இடம் தராமல் இப்போதிருக்கும் இடத்திலேயே வடிவேல் இருப்பது தான் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

சிந்திப்பாரா வடிவேலு????



Wednesday, December 7, 2011

நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்....

என்னடா இவரு இப்படிப்பட்ட தலைப்பு வச்சிருக்காருன்னு யோசிக்கிரிங்களா??
நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.... எதற்கு?
மேலே வாசிக்கவும்.

நடிகர் சூர்யா நடித்ததில் வெற்றி பெற்ற படங்கள் மிகவும் கம்மி தான்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக தான் தொடர் வெற்றி போடுகிறார்.
அதற்கு காரணம் சூர்யா அல்ல. சுர்யாவிற்காக மட்டுமே எந்த படமும் ஓடியதில்லை.
இருந்தாலும் அவர் படங்கள் எப்படி வெற்றி பெறுகிறது என்று பார்த்தால் அதற்கு
காரணங்கள் டைரக்டர் or திரைக்கதை or பாடல்கள் or நகைச்சுவை மட்டும் தான் காரணங்கள்.

மௌனம் பேசியதே, காக்க காக்க, நந்தா, அயன் போன்ற படங்களில் அனைத்தும் புதுமுக டைரக்டர்கள் தான்.
இதிலும் மௌனம் பேசியதே மட்டும் தான் அறிமுக இயக்குனர். மற்ற மூன்று படங்கள் அந்த இயக்குனர்களுக்கு இரண்டாம் படம்.
இந்த நான்கு படங்களும் அதில் இருந்த திரை கதைக்காக ஓடியவை. மேலே சொன்ன நான்கு படங்கள் தவிர சூர்யாவின் மற்ற வெற்றி படங்கள் அனைத்திலும் நல்ல திரைக்கதையும் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களும் தான்.

ஆகா சுர்யவிற்காக ஓடிய படங்களே இல்லை என்று சொல்லலாம்.

மாறாக விஜய் நடித்ததில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ், கில்லி, காவலன் தவிர அனைத்து வெற்றி படங்களிலும் அறிமுக இயக்குனர்கள் தான். போக்கிரி, வேலாயுதம், சிவகாசி, திருபாட்சி, வேட்டைக்காரன் மற்றும் பல
படங்கள் விஜய்காக மட்டுமே ஓடியவை. விஜய் பட தொகுப்பை இங்கே காணலாம்.
பல படங்கள் நல்ல திரைக்கதை இல்லாமல் அனுபவ இயக்குனர் இல்லாமல் வெற்றி பெற்றவை.

அஜித்தின் படங்களும் கிட்ட தட்ட விஜய் படங்கள் மாதிரி தான். அஜித்மற்றும் விஜய் இடையேயான
ஒப்பிட்டுக்கு என்னுடைய முந்தய பதிவுகளை பார்க்கவும்.

நல்ல திரைக்கதை இல்லை என்றால் சூர்யா படம் மிகப்பெரிய வெற்றி அடைவது கஷ்டம் தான்.
உதாரணமாக 'ஏழாம் அறிவு'.

இப்பொழுது உங்களுக்கே தெரிந்திருக்கும் சூர்யா எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.
அட இன்னுமா தெரியவில்லை அதாங்க 'மாஸ் ஹீரோ' என்ற அடைமொழிக்கு சரிப்பட்டு வரமாட்டார்.