Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Thursday, January 26, 2012

இளைய தளபதியின் சிறந்த தனி மனித குணங்கள்....


சென்ற பதிவில் தலயின் சிறந்த குணங்களை பார்த்தோம். இந்த பதிவில் எனக்கு தெரிந்த/பிடித்த இளைய தளபதி விஜயின் சிறந்த தனிமனித குணங்களை பார்ப்போம். தல/சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவை படிக்கும் போது விஜயை ஒரு நடிகராக(நடிகர் இல்லைன்னு எங்களுக்கு தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது) பார்க்காமல் தனிமனிதனாக(??) பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு அஜித் மற்றும் விஜயை பிடிக்கும். விஜயை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். காரணம் எனக்கிருக்கும் தமிழன் என்ற உணர்வு. தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் என் தன்மானம் சும்மா இருக்காது. விஜய் என்ற தமிழன் இணையதளங்களில், SMS-களில் தாக்கப்பட்ட போது தமிழ் உணர்வு என்னை விஜயை அதிகமாக நேசிக்க தூண்டியது.

விடா முயற்சி & உழைப்பு:
விஜய்க்கு அஜித், சூர்யா போல் அழகு கிடையாது. அவர்களை போல் சிறப்பாக நடிக்கவும் தெரியாது. அப்படி இருந்தும் அவர்களை விட முன்னணியில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி தான் காரணம். என்ன தான் அவரின் அப்பா ஆரம்பகாலத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் விடா முயற்சி, உழைப்பு தான். தொடர்ந்து தோல்வியானாலும் ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்தது விடா முயற்சியின் மற்றொரு உதாரணம்.

இன்வால்வ்மென்ட்/பொறுப்புணர்ச்சி:
தான் நடிக்கும் படத்தில் எந்த அளவுக்கு இன்வால்வ்மென்ட் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். படத்தின் பாடல்களை/இசையை தானே தேர்ந்தெடுப்பது அவரது இன்வால்வ்மெண்டை பறைசாற்றுகிறது. தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து தன்னுடைய பொறுப்பை உணர்த்து வேறு எந்த முயற்சியும்(அதாங்க வேற வேற கெட்அப்) எடுக்காமல் தன்னால் முடித்ததை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

எளிமை:
தான் பெரிய நடிகர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் எப்பொழுதும் எளிமையாகத்தான் இருப்பார். எந்த விழாவிற்கு சென்றாலும் கோட், சூட் இல்லாமல் சாதரணமாக தான் செல்வார். நிறைய பேச மாட்டார். நிறை குடம் நீர் தளும்பாது.

இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது:
மற்ற நடிகர் போல நடித்தோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் தான் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்று தெளிவாக இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது. (எனக்கும் விஜய் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. வந்தாலும் ஓட்டு போடமாட்டேன் அரசியல் அனுபவம் பெரும் வரை)

சுயநலத்தில் ஒரு பொதுநலம்:
தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சுயநலத்திற்காக தன் ரசிகர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தினாலும் அதன் மூலம் ஒரு சிலருக்கு உதவி செய்வது பொது நலமே. சுயநலத்திலும் ஒரு பொது நலம்.

அப்பா பிள்ளை:
இவ்வளவு பெரிய நடிகர் ஆனபிறகும் கூட தன்னுடைய அப்பா பேச்சை மறுக்காமல் அதன்படி நடப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்(சொந்தமாக யோசிக்க தெரியாதுன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது தெரியுது). 'எங்கள் வீட்டு பிள்ளை' இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறார்கள்.

டிரென்ட் செட்டர்:
எந்த ஒரு விசயமானாலும் தன்னை அடுத்தவர் ஃபலோவ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து தான் செய்கிறார். விஜய் எப்படி டிரென்ட் செட் பண்ணினார் என்று இங்கே படிக்கவும்.


Thursday, November 17, 2011

இளைய தளபதி ஒரு டிரென்ட் செட்டர்(trendsetter) - ஓர் அலசல்

தளபதி டிரென்ட் செட்டர்(trendsetter) என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா?
இங்கே அவரைப்பற்றி எப்படி டிரென்ட் செட்டராக இருக்கிறார் என்று பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரின் ஸ்டைல், பஞ்ச் டயலாக் பற்றி அனைவர்க்கும் தெரியும்.
10 or 15 வருடங்களுக்கு முன்பு அவர் நடிக்கும் போது அவருடன் நடித்த எந்த நடிகரும் 
அவருடைய ஸ்டைலை or நடிப்பை or பஞ்ச் டயலாக்கை யாரும் பின்பற்றவில்லை
என்பது உண்மையே.

இப்போது தளபதி மேட்டருக்கு வருவோம். எந்த காலகட்டத்தில் எப்படி டிரென்ட் 
செட் பண்ணினார் என்று பார்ப்போம்.

ஃப்ரேம் இல்லாத கண்ணாடி:
     இளைய தளபதி 'நினைத்தேன் வந்தாய்' படத்தில் ஃப்ரேம் இல்லாத சிறிய அளவிலான 
கண்ணாடி அணிந்து நடித்திருப்பார். இந்த வகை கண்ணாடி இந்த படத்தின் ரிலீஸ்க்கு 
அப்புறம் ரொம்ப பிரபலம் ஆனது.

Cross body bag (உடம்புக்கு குறுக்காக அணியும் பை):
     இளைய தளபதி 'சச்சின்' படத்தில் உடம்புக்கு குறுக்காக அணியும் பை அணிந்து நடித்திருப்பார். 
இந்த வகை பை இன்றளவும் கல்லூரி மாணவர்களிடையே  ரொம்ப பிரபலம்.

ஆக்சன் மூவீஸ்:
    தளபதி திருமலை, கில்லி, திருபாச்சி, சிவகாசி என்று ஆரம்பித்த டிரென்ட்டுக்கு இன்று அனைத்து
நடிகர்களும் அடிமை.

குத்து பாட்டு:
     விஜய் படத்தில் தொடர்ச்சியாக குத்து பாட்டு இருக்க்கும். இதுவே இப்பொழுது எல்லா
நடிகர்களும் பாலோ செய்கிறார்கள்.

ஹீரோவுக்கான ஒபெனிங் பாடல்:
    இதற்கு ரஜினி முன்னோடி என்றாலும் விஜய்க்கு அப்புறம் தான் டிரெண்டாக செட் ஆனது.

ரீமிக்ஸ் பாடல்கள்:
    70, 80 வருடங்களில் வந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்வதை தொடங்கி வைத்தவர் விஜய் தான்.

பாடல்களில் கலர் கலராய் உடை அணிவது:
    தன்னோட கலருக்கு பொருத்தம் இல்லாத கலர் கலராய் உடைகளை பாடல்களில் அணிந்து
நடித்தவர் தளபதி தான். அஜித் கூட ஆழ்வார், பரமசிவன் படத்தில் அதை ட்ரை பண்ணி இருப்பார்.

பஞ்ச் டயலாக்:
    இந்த டிரெண்டுக்கு ரஜினி தான் மூல காரணம். ஆனால் விஜய் அவரது படங்களில் யூஸ் 
பண்ணிய பிறகே இன்றைய ஹீரோக்கள் பாலோ பண்ணினார்கள்.

ரீமேக் மூவிஸ்:
   இந்த டிரென்ட் செட் பண்ணியவர் விஜய் என்று யாருக்கும் சொல்ல தேவை இல்லை.

கடைசியாக
பெயருக்கு முன்னால் போடும் பட்டம்:
     சின்ன தளபதி, புரட்சி தளபதி, குட்டி தளபதி என்று விஜயை பார்த்து பட்டம் சூட்டி கொள்கிறார்கள்.