Tuesday, December 27, 2011

அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க : பயனுள்ள தகவல்


இண்டர்ன்ட் வசதி இல்லாத சமயத்தில் எப்படி அவரசமாக SMS மூலமாக தகவல் பெறுவது என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.
இந்த பதிவில் இன்டர்நெட் வசதி இருந்தாலும் எப்படி தடை செய்யப்பட்ட தளங்களை பார்வை இடுவது என்பது பற்றி பார்ப்போம்.

இப்பொழுது கிட்டத்தட்ட பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் பெரும்பாலானோர் இன்டர்நெட் வசதியுள்ள டேட்டா பிளான் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இந்த டேட்டா பிளான் குறைந்த விலையில் கிடைப்பதில்லை. மாதந்தோறும் இதற்காக நாம் செலுத்தும் தொகை கொஞ்சம் அதிகம் தான்.
இதற்காக வீட்டில் பிராட்பேண்ட் வசதி செய்து இணையத்தில் உலா வருவோம், இணைய தளத்தை பார்வை இடுவோம். அலுவகலத்தில் இருக்கும் போது அங்கு இருக்ககூடிய இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி இணையத்தில் தேவையான தகவல்களை பெறுவோம்.

ஆனால் கிட்டதட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஈமெயில், பேஸ்புக், கூகிள்+, ஆர்குட், ட்விட்டர் மற்றும் சில பல தளங்கள் தடை செய்யப்பட்டிருக்கும். இப்படி தடை செய்யப்பட்ட தளங்களை எப்படி பார்வை இடுவது? இதற்கான ட்ரிக்கை இங்கு பார்ப்போம்.

Opera Mini browser என்ற மொபைல் போனில் பயன்படுத்த கூடிய இணைய உலாவியின் demo(simulator) பதிப்பை நாம் உபயோகிக்கும் பிரவ்சர்சில்(IE, chrome, Firefox, Opera browser) இயக்குவதன் மூலம் தடை செய்யப்பட்ட தளங்களை பார்வை இடலாம்.

இந்த opera mini உலாவி இரண்டு வெவ்வேறு பதிப்பாக(2 versions) கிடைக்கின்றது. இந்த இரண்டு பதிப்பில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உபயோகிக்கலாம். நாம் இந்த இரண்டு பதிப்பையும் எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.

1. Opera Mini 6.5
இந்த பதிவு(version) மிகவும் நவீனபடுத்தப்பட்டது. அனைத்து தளங்களையும் மற்ற உலாவியில் பார்ப்பது போன்றே பார்க்கலாம்.
இதை உபயோகித்து பார்க்க பின்வரும் வலை முகவரியை சொடுக்கவும். http://www.opera.com/developer/tools/mini/ அல்லது http://demo.opera-mini.net/public/index.html


இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு உலாவி உங்கள் திரையில் தோன்றும். இந்த உலாவியில் www என்று கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நீங்கள் செல்ல வேண்டிய தளத்தின் முகவரியை குடுக்கவும் (நீங்கள் www என்ற இடத்தில் கிளிக் செய்த உடன் உங்கள் திரையில் கீ-போர்டு தோன்றும். நீங்கள் அதை பயன்படுத்தலாம் அல்லது கணினியில் உள்ள கீ-போர்டை கொண்டு டைப் செய்யலாம்). முகவரியை கொடுத்த பின்பு "என்டர்" கீயையோ அல்லது "Go" பட்டனையோ அழுத்தவும்.






கீழ்க்கண்ட error ஸ்க்ரீன் வந்தால் உங்கள் கம்பெனி proxy செட்டிங்க்ஸ்சை சரி பார்க்கவும்...




proxy செட்டிங்க்ஸ்சை சரி பார்க்க
a. b.
c.    d.



அதன் பின்னர் proxy டைப் மாற்ற

a. b.
c.    d.
e.


இப்பொழுது நீங்கள் gmail தளத்தை பார்க்க விரும்பினால் www.gmail.com என்று டைப் செய்து உங்கள் அக்கௌன்ட் டீட்டைல்சை குடுத்து லாகின் செய்தால் கீழே உள்ளது போன்று உங்கள் திரையில் தோன்றும்.(உங்கள் கணக்காளர் பெயரிலோ அல்லது பாஸ்வோர்டிலோ நம்பர் இருந்தால் அதை டைப் செய்யாமல் திரையில் தோன்றும் கீ-போர்டு மூலமாக டைப் செய்யவும்).









நீங்கள் gmail தளத்தை முழுவதுமாக மற்ற உலாவியில் பார்ப்பது போன்று வேண்டும் என்றால் basic html வியுவிற்கு மாற்றவும்.







2. Opera Mini 4.2
இந்த பதிவு(version) மேலே பார்த்த பதிவு போல் நவீனப்படுத்தபடவில்லை. ஆனாலும் அனைத்து தளங்களையும் இதில் பார்க்கலாம்.
இதை உபயோகித்து பார்க்க பின்வரும் வலை முகவரியை சொடுக்கவும். http://demo.opera-mini.net/demo.html


இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு உலாவி உங்கள் திரையில் தோன்றும்.

மேலே கூறியபடியே இதிலும் proxy செட்டிங்க்ஸ்சை மாற்றி கொள்ளவும்.



இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது போல் உங்களுக்கு சரி வர இயங்கவில்லை என்றால் தெளிவாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் முடிந்தவரையில் உங்களுக்கு உதவுகிறேன்.

என்ஜாய்!!!









Sunday, December 25, 2011

SMS மூலமாக கூகிள் தேடல் - பயனுள்ள சேவை அறிமுகம்.

- கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது விருவிருப்பான கட்டத்தில் பவர் கட் ஆகி விட்டது.
- புதிய நகரம், அறிமுகம் இல்லாத இடம், நள்ளிரவு நேரம் பர்சில் பணம் இல்லை.. உடனடியாக ATM இருக்குமிடம் அல்லது டாக்டர் அல்லது டாக்ஸி சர்வீஸ் நம்பர் கண்டுபிடிக்க வேண்டும்
- ஒரு கிராமத்திலோ அல்லது இன்டர்நெட் வசதி இல்லாத இடத்திலோ இருக்கும் போது ட்ரெயின் ரிசர்வேசன் நிலவரம் அல்லது இருக்கை நிலவரமோ தெரிய வேண்டும்.

மேலே சொன்ன ஏதாவது ஒரு நிலைமையிலோ அல்லது மின்சாரம் அல்லது இன்டர்நெட் வசதி இல்லாத போது உங்களுக்கு அவசரமாக தகவல் தெரியவேண்டிய சூழ்நிலையில் இருப்பவரா நீங்கள்?
ஆம் என்றால் உங்களுக்காகவே இந்த பதிவு. உற்ற நேரத்தில் உதவ கூடிய நண்பனை அறிமுகம் செய்கிறேன் வாருங்கள்.

கூகுளின் SMS தேடல் சேவை ஒரு சிறந்த வரப்பிரசாதமே. இந்த சேவையின் மூலமாக நீங்கள் தகவல்களை விரல் நுனியில் மொபைல் போனில் பெறலாம்.இதை எப்படி உபயோகிப்பது? இதை உபயோகிப்பது மிகவும் சுலபமே.


நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒரே ஒரு SMS மட்டும் அனுப்பவேண்டும். கூகிள் நிறுவனம் இந்த சேவைக்காக 9773300000 என்ற நம்பரை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சாதாரண மொபைல் நம்பர் தான். ஸ்பெஷல் நம்பர் அல்ல. உங்களுக்கு இலவசமாக SMS அனுப்பும் வசதி இருந்தால் இந்த சேவையும் இலவசம் தான். உங்களிடம் இலவச SMS சேவை இல்லை என்றால் இந்த சேவைக்கு 5 பைசா or 10 பைசா or 15 பைசா என நீங்கள் வைத்திருக்கும் SMS பிளானுக்கு ஏற்றவாறு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் உங்களிடம் வசூலிக்கும்.

இந்த சேவை இந்தியா முழுவதும் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் அனுப்பும் SMS, லோக்கல் SMS-ஆகவே எடுத்துக்கொள்ளப்படும்.
இதை எப்படி உபயோகிப்பது? உதாரணமாக ட்ரெயின் PNR ஸ்டேட்டஸ் அறிந்து கொள்ளவேண்டும் என்றால் PNR-இல் உள்ள 10 நம்பர்களை டைப் செய்து 9773300000 என்ற நம்பருக்கு அனுப்பவும். உடனடியாக உங்களுக்கு பதில் வரும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ட்ரெயின் PNR ஸ்டேட்டஸ் அறிந்து கொள்ள மீண்டும் மீண்டும் SMS அனுப்ப தேவை இல்லை. ஒருமுறை அனுப்பி பதில் வந்தவுடன் ON என்று டைப் செய்து 9773300000 என்ற நம்பருக்கு அனுப்பினால் நீங்க பயணம் மேற்கொள்ளும் நேரம் வரை ஆட்டோமேட்டிக்காக உங்களுக்கு கூகிள் பதில் அனுப்பி கொண்டே இருக்கும்.

கிரிக்கெட் ஸ்கோர் வேண்டும் என்றால் cricket score ind vs aus என்று டைப் செய்து SMS அனுப்பி பதில் வந்தவுடன் ON என்று டைப் செய்து அனுப்பவும். உங்களுக்கு ஸ்கோர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

உங்களுக்கு இந்த சேவையை பற்றி உதவி வேண்டும் என்றால் help என்று டைப் செய்து அனுப்பினால் உதவி கிடைக்கும். ஸ்டாக் மார்கெட், weather, லோக்கல் பிசினஸ் அட்ரஸ், டாக்ஸி சேவை நம்பர், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழி என்று ஏராளமான தகவல்களை பெறலாம்.

கீழே எந்த எந்த தகவல்களை இந்த சேவையின் மூலமாக எப்படி பெறுவது என்று பார்ப்போம்.


தேடல் வார்த்தைகள்

Cricket

கிரிக்கெட் ஸ்கோரை அறிய CRI <TOURNAMENT NAME> அல்லது CRI <TEAM NAME> என்று டைப் செய்து அனுப்பவும்.
உதாரணம்:
cricket score
cricket score india vs australia
cri ipl
cri icl
cri ranji

Directions(வழி அறிய)

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வழி அறிய.
உதாரணம்: 
directions egmore to adyar

Railways PNR Status

PNR ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள 10 digit pnr number டைப் செய்து அனுப்பவும்.
உதாரணம்: 
2345678901

Trains between stations(இரண்டு ரயில் நிலையங்களுக்கு வழியே செல்லும் ரயில்களை அறிய)

உதாரணம்: 
train chennai to maduai

Train seat availability(இருக்கை காலி நிலவரம் அறிய)

இருக்கை காலி நிலவரம் அறிய TRAIN AVAIL 12637 chennai TO madurai ON 31-12 என்று டைப் செய்யவும். (‘TRAIN AVAIL train number start city TO end city ON date’).

உதாரணம்: 

TRAIN AVAIL 12637 chennai TO madurai ON 31-12


Train Fare(கட்டண விபரம் அறிய)

ட்ரெயின் கட்டண விபரம் அறிய  TRAIN FARE 12637 chennai TO madurai IN sl என்று டைப் செய்யவும்.  (‘TRAIN FARE train number start city TO end city IN class of (2/2)travel’).
உதாரணம்: 
 TRAIN FARE 12637 chennai TO madurai IN sl

Business Search(முகவரி அறிய)

ஹோட்டல்,ஹாஸ்பிட்டல், ஷாப்பிங் மால், தியேட்டர், தொழில் நிறுவனத்தின் முகவரி அறிய 
உதாரணம்: 
le meridian hotel
satyam theater

Stock Quotes(ஸ்டாக்கின் விலை அறிய)

பங்கு சந்தையில் குறிப்பிட்ட ஸ்டாக்கின் விலை அறிய
உதாரணம்: reliance stock
reliance stock

Commodity Prices(தங்கம் மற்றும் இதர பொருட்களின் விலை அறிய)

தங்கம் மற்றும் இதர பொருட்களின் விலை அறிய

உதாரணம்: 
price gold

Local time(குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய நேரம் அறிய)

குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய நேரம் அறிய

உதாரணம்: 
time london

Horoscopes(ராசி பலன் அறிய)

ராசி பலன் அறிய

உதாரணம்:
Leo

News

பொதுவான, தனி நபர் அல்லது ஒரு கட்சியை பற்றிய செய்தியை ariya
உதாரணம்:
news
news tendulkar

Movies

திரைப்படங்களின் காட்சி நேரம் மற்றும் ரேட்டிங் அறிய 
உதாரணம்:
movies chennai
movie rajapatai

Flight status

விமான பயண நிலவரம் அறிய 
உதாரணம்: 
it302

Definition(வார்த்தையின் விபரத்தை அறிய )

ஒரு வார்த்தையின் விபரத்தை அறிய 
உதாரணம் : 
define inflation

Weather(வானிலை அறிக்கையை அறிய)

வானிலை அறிக்கையை அறிய

உதாரணம்: weather delhi
weather chennai

Translation(மொழிமாற்றம் செய்ய)

ஒரு வார்த்தையை மொழிமாற்றம் செய்ய

உதாரணம்: 
translate hello from english to french

Web snippets(வலை தேடல்)

வலை தேடலிலிருந்து தகவல் அறிய 
உதாரணம்: 
web chandrayaan

Calculator

பணமாற்ற விகிதம், டெம்பரட்சேர் (temperature) கன்வெர்சன், கூட்டல் பெருக்கல் கணக்குகள் போன்றவற்றை உபயோகிக்க.
உதாரணம்:
5*10/5-4 
((5 * 10) / 5) – 4 = 6
1 kilo in pounds
1 USD in INR
35c in F

Currency Conversion(பணமாற்ற விகிதம்)

ஒரு நாடு கரன்சியை இன்னொரு நாட்டு கரன்சி மதிப்பில் அறிய  
உதாரணம்:
5000 inr in usd
100 usd in inr

Help(உதவி பெற)

கூகுள் SMS தேடல் சம்பந்தமான உதவி பெற
உதாரணம்: tips
help
tips

Thursday, December 22, 2011

பாகம் 3 ::: வெட்கக்கேடான உண்மைகள் ::: பாகம் 3





இதற்கு முந்தய பாகங்களை படிக்க... பாகம்-1 மற்றும் பாகம்-2

ஏழைக்கோ, பிச்சைகாரருக்கோ குடுக்கும் போது 20 ரூபாய் பெரியதாக தோன்றும் நமக்கு.
ஹோட்டலில் டிப்ஸ் குடுக்கும் போது அதே 20 ரூபாய் சிறியதாக தோன்றும்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு 3 நிமிடம் ஒதுக்குவது சிரமமாக தோன்றும்
அனால் சினிமா பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குவது ஈசியாக தோன்றும்.

நாள் முழுதும் உழைத்துவிட்டு ஜிம்முக்கு போவது கஷ்டமாக இருக்காது
அனால் வீட்டில் உள்ள வேலைகளை பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

காதலர்கள் தினத்திற்காக வருடம் முழுவதும் காத்திருப்போம்
அனால் அன்னையர் தினம் என்று வரும் என்பது தெரியாது நமக்கு.

பணம் ஒரு பிசாசு என்போம் அனால் அதை சம்பாதித்து கொண்டே இருப்போம்.
பதவி உயர உயர தனிமைப்படுத்தபடுவோம் என்போம் ஆனால் பதவி உயர்வு வேண்டும் என்போம்.
குடி குடியை கெடுக்கும் என்போம் ஆனால் குடித்து கொண்டே இருப்போம்.



இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் போடுவது சிரமமாக இருக்கும்
அனால் மொக்கை பதிவு போடுவதற்கு மட்டும் சிரமம் தெரியாது



கேவலமான உண்மைகள் - பாகம் 2





கேவலமான உண்மைகள் - பாகம் 1-க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாகம் 2.

பணம் இல்லாத போது நாம் நாடு காய்கறிகளை வீட்டில் உண்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் அதே காய்கறிகளை உயர்தர ஹோட்டலில் உண்போம்.

பணம் இல்லாத போது சைக்கிளில் செல்வோம்
ஆனால் பணம் வந்துவிட்டால் உடற்பயிற்சிக்காக ஜிம்மில் சைக்கிளிங் செய்வோம்.

பணம் இல்லாத போது உணவிற்காக நடந்து சென்று உழைப்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் கொழுப்பை குறைக்க நடப்போம்.

பணம் இல்லாத போது திருமணம் செய்து கொள்ள நினைப்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் விவகாரத்து பெற நினைப்போம்.

பணம் இல்லாத போது மனைவியே உதவியாளர்
ஆனால் பணம் வந்துவிட்டால் உதவியாளரே(secretary) சீக்ரெட் மனைவியாகிவிடுவார்.

பணம் இல்லாத போது பணக்காரன் போல நடிப்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் ஏழை போல நடிப்போம்.

Tuesday, December 20, 2011

குறைக்கிறவர்கள் கடிக்க மாட்டார்கள்.. கவலை வேண்டாம் இளைய தளபதியே..





தலைப்பை பார்த்து விட்டு இது விஜய் ரசிகனின் பதிவு என்று எண்ண வேண்டாம்.
நான் இளையதளபதியின் ரசிகன் அல்ல.. அனால் என் பதிவுகளை படிக்கும் போது உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.
கவலை வேண்டாம் இளையதளபதி தப்பு செய்யும் போது தட்டி கேட்போம்..

பதிவின் தலைப்பில் கூறிய படி யார் குறைக்கிறார்கள்? யாரை கடிக்க மாட்டார்கள்?

நீங்கள் தளபதியின் ரசிகர் என்றால் இந்த பதிவின் நோக்கத்தை இந்நேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் தான் புத்திசாலி ஆயிற்றே.

இந்த உலகத்தில் பிறந்த அணைத்து மனிதனுமே சுயநலவாதி தான். ஏன் இந்த பதிவுலகில் கூட அதிக ஹிட்ஸ் வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் பதிவை ஆட்டைய போடுபவர்கள், கொச்சையான பதிவுகள் போடுபவர்கள் தான் அதிகம்...

அப்படி இருக்க, விஜய் தமிழக மீனவர்களுக்காக மட்டும் இலங்கையை கண்டித்தார் ஆனால் தண்ணீர் தராத கேரள அரசை எதிர்த்து குரல் குடுக்கவில்லை. ஏனென்றால் இலங்கையால் தன் தொழிலுக்கு எந்த பாதகமும் இல்லை ஆனால் கேரளாவில் அவர் படம் ஓட வேண்டும் என்ற சுயநலத்தால் தான் அமைதியாக இருக்கிறார், அவர் சுயநலவாதி என்று சிலர் பலர் குறைக்கிறார்கள்.

ஒருவேளை விஜய் கேரள அரசை எதிர்த்து குரல் கொடுத்து நாளை அரசியலில் இறங்கினால் இப்படி குறைப்பர்வர்கள் அவருக்கு ஓட்டு போடவா போகிறார்கள்? நிச்சயமாக ஓட்டு போடமாட்டார்கள். அதற்கு வேறு ஒரு காரணம் சொல்லி குறைப்பார்கள்.

தளபதி அவர்களே இவர்கள் அனைவரும் சுயநலவாதிகளே. இவர்கள் குறைப்பதை கண்டுகொள்ளவேண்டாம். குறைக்கின்றவர்கள் கடிக்கமாடார்கள்.

ரஜினியை உசுபேத்தி விட்ட ஜனங்கள் தான் இப்பொழுது தளபதியையும் உசுப்பேத்துகிறார்கள்.. இதுல வெளிநாட்டு சதி இருக்குமோ???


Monday, December 19, 2011

வலையுலக பதிவர்களா? பதிவுலக வலையர்களா?... காப்பி & பேஸ்ட் செய்யும் மா.... ஜென்மங்களின் லிஸ்ட்





வலையுலக பதிவர்கள் என்று கேள்வி பட்டிருக்கோம். அது என்ன பதிவுலக வலையர்கள்??
அதாங்க copy & paste பண்றதையே பொழப்பா வச்சிருக்கிற சில மானங்கெட்ட ஜென்மங்களை தான்(நன்றி சொல்லாத,மன்னிப்பு கேட்காதவர்களை மட்டுமே) பதிவுலக வலையர்கள் என்று அழைக்கின்றேன்.
இப்படி அழைப்பது ஒன்றும் தவறில்லையே?

tamilyouthcafe.com என்ற வலையை வச்சிருக்கிறவன் என்னுடைய அணைத்து பதிவுகளையும் ஆட்டைய போட்டுட்டான் மக்கா.....
அவனுடைய வலை முகவரியை தமிழில் அழைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா? தமிழ்யூசூத்காப்பிகடை.காம்

இதில் வேடிக்கை என்னவென்றால் காப்பி பேஸ்ட் பதிவை போட்டுவிட்டு அதற்கு கீழே காப்பி ரைட்ஸ் வேற போட்டிருக்கான் (©2011 தமிழ்யூசூத்காப்பிகடை.காம் All rights reserved).

ஒருவேளை அவன் என்னிடம் வந்து "உன் பதிவ நான் வச்சிக்குறேன் அதுக்கு பதிலாக என்னோட .........வை நீ வச்சுக்கோன்னு" டீல் பேசினால் போனால் போகிறது என்று டீல் ஓகே சொன்னாலும் சொல்லுவேன் மக்கா..

என் பதிவை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் மேற்க்கண்டவாறு பேசியதற்காக என்னை மன்னித்துக் கொள்ளவும்.

என்னுடைய அடுத்த பதிவு 25-வது பதிவு. அதற்காக இந்த 24-வது பதிவை விறுவிறுப்பாக கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். அதற்குள்ளாக இப்படிப்பட்ட பதிவை போடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்..

enayamthahir.com நடத்தும் அன்பரே நீங்கள் இட்ட copy & paste பதிவின் இறுதியில் தவறான தளத்திற்கு இணைப்பு முகவரியை கொடுத்துள்ளீர்கள். அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் பதிவின் பின்னூட்டதிலும் இதை தெரிவித்து இருந்தேன். மேலே கூறிய தளத்திற்கு உதவ வேண்டாம் என்று கேட்டுகொள்கின்றேன். திருத்தி கொள்ளவில்லை என்றால் உங்கள் enaiyamthahir வலை enaiyamthavir வலையாக மாறிவிடும்.

வாசகர்களே உங்களுக்கு தெரிந்த காப்பி & பேஸ்ட் பதிவர்களின் வலை முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அனைத்து முகவரியையும் தொகுத்து பின்னர் ஒரு பதிவில் வெளிப்படுத்தப்படும்.

உசாரய்யா உசாரு... copy & paste உசாரு...

Sunday, December 18, 2011

ரஜினி நினைத்திருந்தால் தி.மு.க மடிந்து புல் பூண்டு முளைத்திருக்கும் - கருணாஸ்



நாட்டில் ஒருவரை பாராட்ட வேண்டும் என்பதற்காக அடுத்தவரை குறை சொல்வது ஃபேசன் ஆகி விட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகவும் அதிகம்.

இப்படித்தான் கடந்த வாரம் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கருணாஸ் என்ற வாய் துடுக்கு நிறைந்த நகைச்சுவை நடிகர் மிகவும் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

அவர் ரஜினியை பாராட்டிய நேரத்தை விட மற்ற நடிகர்களை விமர்சித்து பேசிய நேரம் தான் அதிகம். ரஜினி அரசியலுக்கு வருவதில் அவருக்கு இல்லாத அக்கறை இவருக்கு என்ன? ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் அவரின் ரசிகர்களுக்கு ஏன் அவ்வளவு ஆர்வம்? ஏனென்றால் ரஜினியின் பெயரை சொல்லி அவர்களும் சம்பாதிக்க தான். விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர்களுக்கு கிடைத்த பதவி, மரியாதை இவற்றை கண்டு பொறுக்க முடியாதவர்கள் தான் ரஜினியை தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால் அவருக்கு கிடைக்க போகும் நெருக்கடிகள் ஏராளம். வருமான வரித்துறை, தனிப்பட்ட மனித தாக்குதல் போன்றவற்றில் இருந்து தப்பிப்பது சுலபம் அல்ல.

விஜயகாந்த் விசயத்தில் இதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அவர் நல்லவரோ கெட்டவரோ அது நமக்கு தேவை இல்லை. ஆனால் அரசியலுக்கு வந்தது முதல் அவர் இழந்தது ஏராளம். சொத்து, மானம் மரியாதை அத்தனையும் இழந்திருக்கிறார்.

என்னடா பதிவின் தலைப்பிற்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைகிறீர்களா? இதோ விசயத்திற்கு வருவோம்.
ரஜினி விழாவில் கருணாஸ் கீழ் கண்டவாறு கூறியிருக்கிறார்.

"ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதினால் தான் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவராக இருக்கிறாராம்". ஒருவேளை அவர் சொல்லியபடியே ரஜினி அரசியலில் இருந்திருந்தால் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது. அப்படி என்றால் தி.மு.க-வின் நிலைமை? அந்த கட்சி மண்ணோடு மண்ணாகி இந்நேரம் அந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கும்.

ஆக தி.மு.க கட்சி தான் ரஜினிக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறது