Sunday, December 25, 2011

SMS மூலமாக கூகிள் தேடல் - பயனுள்ள சேவை அறிமுகம்.

- கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது விருவிருப்பான கட்டத்தில் பவர் கட் ஆகி விட்டது.
- புதிய நகரம், அறிமுகம் இல்லாத இடம், நள்ளிரவு நேரம் பர்சில் பணம் இல்லை.. உடனடியாக ATM இருக்குமிடம் அல்லது டாக்டர் அல்லது டாக்ஸி சர்வீஸ் நம்பர் கண்டுபிடிக்க வேண்டும்
- ஒரு கிராமத்திலோ அல்லது இன்டர்நெட் வசதி இல்லாத இடத்திலோ இருக்கும் போது ட்ரெயின் ரிசர்வேசன் நிலவரம் அல்லது இருக்கை நிலவரமோ தெரிய வேண்டும்.

மேலே சொன்ன ஏதாவது ஒரு நிலைமையிலோ அல்லது மின்சாரம் அல்லது இன்டர்நெட் வசதி இல்லாத போது உங்களுக்கு அவசரமாக தகவல் தெரியவேண்டிய சூழ்நிலையில் இருப்பவரா நீங்கள்?
ஆம் என்றால் உங்களுக்காகவே இந்த பதிவு. உற்ற நேரத்தில் உதவ கூடிய நண்பனை அறிமுகம் செய்கிறேன் வாருங்கள்.

கூகுளின் SMS தேடல் சேவை ஒரு சிறந்த வரப்பிரசாதமே. இந்த சேவையின் மூலமாக நீங்கள் தகவல்களை விரல் நுனியில் மொபைல் போனில் பெறலாம்.இதை எப்படி உபயோகிப்பது? இதை உபயோகிப்பது மிகவும் சுலபமே.


நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒரே ஒரு SMS மட்டும் அனுப்பவேண்டும். கூகிள் நிறுவனம் இந்த சேவைக்காக 9773300000 என்ற நம்பரை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சாதாரண மொபைல் நம்பர் தான். ஸ்பெஷல் நம்பர் அல்ல. உங்களுக்கு இலவசமாக SMS அனுப்பும் வசதி இருந்தால் இந்த சேவையும் இலவசம் தான். உங்களிடம் இலவச SMS சேவை இல்லை என்றால் இந்த சேவைக்கு 5 பைசா or 10 பைசா or 15 பைசா என நீங்கள் வைத்திருக்கும் SMS பிளானுக்கு ஏற்றவாறு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் உங்களிடம் வசூலிக்கும்.

இந்த சேவை இந்தியா முழுவதும் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் அனுப்பும் SMS, லோக்கல் SMS-ஆகவே எடுத்துக்கொள்ளப்படும்.
இதை எப்படி உபயோகிப்பது? உதாரணமாக ட்ரெயின் PNR ஸ்டேட்டஸ் அறிந்து கொள்ளவேண்டும் என்றால் PNR-இல் உள்ள 10 நம்பர்களை டைப் செய்து 9773300000 என்ற நம்பருக்கு அனுப்பவும். உடனடியாக உங்களுக்கு பதில் வரும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ட்ரெயின் PNR ஸ்டேட்டஸ் அறிந்து கொள்ள மீண்டும் மீண்டும் SMS அனுப்ப தேவை இல்லை. ஒருமுறை அனுப்பி பதில் வந்தவுடன் ON என்று டைப் செய்து 9773300000 என்ற நம்பருக்கு அனுப்பினால் நீங்க பயணம் மேற்கொள்ளும் நேரம் வரை ஆட்டோமேட்டிக்காக உங்களுக்கு கூகிள் பதில் அனுப்பி கொண்டே இருக்கும்.

கிரிக்கெட் ஸ்கோர் வேண்டும் என்றால் cricket score ind vs aus என்று டைப் செய்து SMS அனுப்பி பதில் வந்தவுடன் ON என்று டைப் செய்து அனுப்பவும். உங்களுக்கு ஸ்கோர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

உங்களுக்கு இந்த சேவையை பற்றி உதவி வேண்டும் என்றால் help என்று டைப் செய்து அனுப்பினால் உதவி கிடைக்கும். ஸ்டாக் மார்கெட், weather, லோக்கல் பிசினஸ் அட்ரஸ், டாக்ஸி சேவை நம்பர், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழி என்று ஏராளமான தகவல்களை பெறலாம்.

கீழே எந்த எந்த தகவல்களை இந்த சேவையின் மூலமாக எப்படி பெறுவது என்று பார்ப்போம்.


தேடல் வார்த்தைகள்

Cricket

கிரிக்கெட் ஸ்கோரை அறிய CRI <TOURNAMENT NAME> அல்லது CRI <TEAM NAME> என்று டைப் செய்து அனுப்பவும்.
உதாரணம்:
cricket score
cricket score india vs australia
cri ipl
cri icl
cri ranji

Directions(வழி அறிய)

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வழி அறிய.
உதாரணம்: 
directions egmore to adyar

Railways PNR Status

PNR ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள 10 digit pnr number டைப் செய்து அனுப்பவும்.
உதாரணம்: 
2345678901

Trains between stations(இரண்டு ரயில் நிலையங்களுக்கு வழியே செல்லும் ரயில்களை அறிய)

உதாரணம்: 
train chennai to maduai

Train seat availability(இருக்கை காலி நிலவரம் அறிய)

இருக்கை காலி நிலவரம் அறிய TRAIN AVAIL 12637 chennai TO madurai ON 31-12 என்று டைப் செய்யவும். (‘TRAIN AVAIL train number start city TO end city ON date’).

உதாரணம்

TRAIN AVAIL 12637 chennai TO madurai ON 31-12


Train Fare(கட்டண விபரம் அறிய)

ட்ரெயின் கட்டண விபரம் அறிய  TRAIN FARE 12637 chennai TO madurai IN sl என்று டைப் செய்யவும்.  (‘TRAIN FARE train number start city TO end city IN class of (2/2)travel’).
உதாரணம்
 TRAIN FARE 12637 chennai TO madurai IN sl

Business Search(முகவரி அறிய)

ஹோட்டல்,ஹாஸ்பிட்டல், ஷாப்பிங் மால், தியேட்டர், தொழில் நிறுவனத்தின் முகவரி அறிய 
உதாரணம்
le meridian hotel
satyam theater

Stock Quotes(ஸ்டாக்கின் விலை அறிய)

பங்கு சந்தையில் குறிப்பிட்ட ஸ்டாக்கின் விலை அறிய
உதாரணம்: reliance stock
reliance stock

Commodity Prices(தங்கம் மற்றும் இதர பொருட்களின் விலை அறிய)

தங்கம் மற்றும் இதர பொருட்களின் விலை அறிய

உதாரணம்
price gold

Local time(குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய நேரம் அறிய)

குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய நேரம் அறிய

உதாரணம்
time london

Horoscopes(ராசி பலன் அறிய)

ராசி பலன் அறிய

உதாரணம்:
Leo

News

பொதுவான, தனி நபர் அல்லது ஒரு கட்சியை பற்றிய செய்தியை ariya
உதாரணம்:
news
news tendulkar

Movies

திரைப்படங்களின் காட்சி நேரம் மற்றும் ரேட்டிங் அறிய 
உதாரணம்:
movies chennai
movie rajapatai

Flight status

விமான பயண நிலவரம் அறிய 
உதாரணம்
it302

Definition(வார்த்தையின் விபரத்தை அறிய )

ஒரு வார்த்தையின் விபரத்தை அறிய 
உதாரணம் : 
define inflation

Weather(வானிலை அறிக்கையை அறிய)

வானிலை அறிக்கையை அறிய

உதாரணம்: weather delhi
weather chennai

Translation(மொழிமாற்றம் செய்ய)

ஒரு வார்த்தையை மொழிமாற்றம் செய்ய

உதாரணம்
translate hello from english to french

Web snippets(வலை தேடல்)

வலை தேடலிலிருந்து தகவல் அறிய 
உதாரணம்
web chandrayaan

Calculator

பணமாற்ற விகிதம், டெம்பரட்சேர் (temperature) கன்வெர்சன், கூட்டல் பெருக்கல் கணக்குகள் போன்றவற்றை உபயோகிக்க.
உதாரணம்:
5*10/5-4 
((5 * 10) / 5) – 4 = 6
1 kilo in pounds
1 USD in INR
35c in F

Currency Conversion(பணமாற்ற விகிதம்)

ஒரு நாடு கரன்சியை இன்னொரு நாட்டு கரன்சி மதிப்பில் அறிய  
உதாரணம்:
5000 inr in usd
100 usd in inr

Help(உதவி பெற)

கூகுள் SMS தேடல் சம்பந்தமான உதவி பெற
உதாரணம்: tips
help
tips

0 திட்டுகள்: