Tuesday, October 24, 2017

திருமணம் செய்து கொள்ளாத கனவு கன்னிகள்

சிலருக்கு அதிர்ஷ்டம் என்பது கூரையை பொத்துக்கொண்டு கொட்டும். அப்படி பட்ட அதிர்ஷ்டத்தின் மூலம் தொழில், புகழ், பணம் போன்ற வற்றை சம்பாதித்து கோடி கட்டி பரப்பார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு வாழ்க்கை சரியாக அமையாது.
ஒரு கால கட்டத்தில்(சிலர் இன்றளவும்) கனவு கன்னியாக சினிமாவில் கொடி கட்டி பறந்து வாழ்க்கை  சரியாக அமையாத சில நடிகைகளை பற்றி இங்கு பாப்போம்.

1. தபு
இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் இன்னும் சில படங்களில் நடித்தவர். 45 வயதான தபு இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உட்பட 50-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



2. சுஷ்மிதா சென்
1994-ல் Miss. Universe பட்டம் வென்ற சுஷ்மிதா சென் தமிழில் வெளியான ரட்சகன் படம் மூலம் திரையில் அறிமுகம் ஆனவர். 41 வயதான சுஷ்மிதா ஒரு பெண் குழந்தையை 2000-ம் ஆண்டு தத்து எடுத்து வளர்த்து வருகிறார். 30-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



3. ப்ரீத்தி ஜிந்தா
நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். Indian Premier League-ல் பங்கேற்றுள்ள பஞ்சாப் அணியின் சொந்தக்காரர். 42 வயதான ப்ரீத்தி பலமுறை காதலில் விழுந்துள்ளார். இருந்தபோதிலும்   இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



4. ஷோபனா
பரத நாட்டியத்தில் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்றுள்ளவர் நடிகை ஷோபனா. 80 மற்றும் 90-களில் பல படங்களில் நடித்த ஒரு முன்னணி நடிகை. 1970-ல் பிறந்த இவர் 200-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணத்தில் ஏனோ நாட்டம் இல்லை. இதனாலேயே திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றார்.



5. கௌசல்யா
37 வயதான கௌசல்யாவின் உண்மையான பெயர் நந்தினி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஹீரோயின், சகோதரி, அம்மா போன்ற வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் உயரமான நடிகையாக வலம் வந்தவர். சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் அவார்டு பெற்றுள்ளார். கர்நாடகாவில் பிறந்த கௌசல்யா இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்,



6.மல்லிகா ஷெராவத்
மிகவும் தைரியசாலியன மல்லிகா பல ஆண்களின் இதயங்களில் குடிகொண்ட இளவரசி என்றுதான் சொல்லவேண்டும். 39 வயதான மல்லிகா Bachelorette என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தன் வருங்கால கணவரை தேர்வு செய்ய முயன்றார். இருந்தாலும் மனம் கவர்ந்த ஆண் அவருக்கு சிக்க வில்லை.



7. ஊர்மிளா மடோன்கர்
90-களில் வலம் வந்த ஒரு அழகு பதுமை என்றே சொல்லவேண்டும். ரங்கீலா என்ற ஹிந்தி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர். செக்ஸி என்ற வார்த்தைக்கே அர்த்தமாக இருந்தவர். இந்தியன் படத்தில் உலக நாயகனோடு ஜோடி போட்டவர். ஒரு ஆணுடனான பந்தம் எனக்கு தேவை என்று எப்பொழுதுமே தோன்றியது இல்லை என்று சொன்னவர். 42 வயதான ஊர்மிளா இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



8.நமீதா
மச்சான்ஸ் நடிகையை பற்றி சொல்ல தேவை இல்லை. எங்கள் அண்ணாவில் மிகவும் ஸ்லிமாக இருந்தவர். யார் கண் பட்டது என்று தெரியவில்லை இப்போ ரொம்ப உப்பி பொய் உள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரிடமும் வாங்கி கட்டி கொண்டவர். 36 வயதான இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. சில நாட்களாக சரத் பாபுவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாக ஒரு தகவல். இதை இருவருமே மறுத்துள்ளனர்.


9. நக்மா
காதலனில் பிரபு தேவாவை உருகி உருகி காதலித்தவர். பாட்சாவில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தவர். தமிழ் நாடு இவர் பின்னால் இருந்தது ஒரு காலம். நாட்டாமையுடன் சில படங்களில் நடித்தத்தின் விளைவு சீக்கிரமே காணாமல் போய் விட்டார். இப்பொழுது காங்கிரஸ் கட்சியில் மகளிரணி  தலைவர் பொறுப்பில் உள்ளார். 42 வயதான இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.


10. கனகா
மாங்குயிலே பூங்குயிலே என்று ராமராஜுடன் டூயட் பாடியவர். ரஜினி, கமல், பிரபு என்று அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர்.43 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.




என்ன படித்து முடித்து விடீர்களா. அடுத்தது இவர்களில் யாரை திருமணம் செய்யலாம் என்று யோசிச்சிட்டு இருக்கிங்களா? உங்க சாய்ஸ கமெண்டில் தெரிய படுத்தலாமே!!

Monday, October 23, 2017

அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து துவைத்த விஜயின் மெர்சல்


விஜயின் மெர்சல் படத்தின் முதல் நாள் வசூல் மழையால் தமிழ் சினிமாவே குதூகலத்தில் உள்ளது.

மெர்சல் படம் குவித்த முதல் நாள் சாதனைகளில் சில இதோ.....


கேரளாவின் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹6.11 கோடி
சென்னையில் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹1.52 கோடி
U.K-யில் தமிழ் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹81.08 லட்சம்
பிரான்சில் தமிழ் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங்: 4700 admissions
அமெரிக்காவில் தமிழ் படத்தின் மிகப்பெரிய நடு வாரத்தின் கலெக்சன் : $474,000
இந்தியாவில் விஜய் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங்: ₹34 கோடி.

மெர்சல் படம் அமீர் கானின் டங்கலை விடவும், ஷாருக் கானின் Raees-ஐ விடவும் மிகப்பெரிய ஓப்பனிங்கை அமெரிக்காவில் பெற்றுள்ளது.

இருந்தாலும் ரஜினி படத்தை ஒருசில இடங்களில் மெர்சல் படம் முந்த முடியவில்லை. மெர்சல் இப்பொழுது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங்கில் இரண்டாம் இடந்தை பெற்றுள்ளது.
அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் இடம் பெற்றுள்ளது.

ரஜினியின் மிகப்பெரிய ஓப்பனிங் ரெக்கார்டை தமிழ்நாட்டில் மெர்சல் முறியடித்துள்ளதாக பல சினிமா வர்த்தக நபர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன ஆனால் என்னால் அவற்றை உறுதி படுத்த முடியவில்லை. என் கணக்கு படி  ரஜினியின் கபாலி ₹23.5 கோடியும், விஜயின் மெர்சல் ₹22.5 கோடியும் பெற்றுள்ளது. நான் நம்பகமான தகவல் வந்ததும் உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்.

இனிமேலும் மெர்சல் வசூல் மழை பெய்யுமா எனபது படம் பார்த்தவர்களின் கருத்து மற்றும் பொதுவான மக்கள் காட்டும் ஆர்வத்தை பொறுத்து அமையும். படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்த்துள்ளதாகவும், குடும்பத்துடன் பார்க்க கூடியதாகவும் இருப்பதாக தகவல். பாஜக புண்ணியத்தால் மெர்சல் படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


எப்படியோ விஜயின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Thanks Forbes.com

Tuesday, October 10, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நமது பதிவை ஆரம்பிப்போம். வடிவேலு சார் நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

நான் பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்த வடிவேலுவின் டாப் 10 நகைச்சுவை காட்சிகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள சில படங்களில் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ரசிக்கக்கூடியவை. இது என்னோட விருப்ப பட்டியல். உங்களுக்கு இதில் மாற்று கருத்து இருந்தால் கமெண்ட்டில் தெரிவிக்கவும்

1. கைப்புள்ள காமெடி from வின்னர் (Winner) 



2. பிரெண்ட்ஸ் (Friends) 



3. Sing In The Rain - மனதை திருடி விட்டாய்(Manathai Thirudi Vittai)



4. கைய பிடிச்சி இழுத்தியா from நேசம் புதுசு (Nesam Puthusu)



5. வாம்மா மின்னல் from மாயி (Maayi)



6.தீப்பொறி திருமுகம் from இங்கிலீஷ்காரன் (Englishkaaran)



7.துபாய் பாண்டி from வெற்றிகொடி கட்டு (Vetri Kodi Kattu)



8. வடை போச்சே from போக்கிரி (Pokkiri)



9. சூனா பானா from கண்ணாத்தாள் (Kannathaal)



10. கௌரவம் கௌரவம்னு நாறடிச்சிட்டியே from கார்மேகம் (Kaarmegam)



Honerable Mention
இம்சை அரசன் 23-ம் புலிகேசி (Imsai Arasan 23 aam Puli Kesi)