விஜயின் மெர்சல் படத்தின் முதல் நாள் வசூல் மழையால் தமிழ் சினிமாவே குதூகலத்தில் உள்ளது.
மெர்சல் படம் குவித்த முதல் நாள் சாதனைகளில் சில இதோ.....
கேரளாவின் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹6.11 கோடி
சென்னையில் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹1.52 கோடி
U.K-யில் தமிழ் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் : ₹81.08 லட்சம்
பிரான்சில் தமிழ் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங்: 4700 admissions
அமெரிக்காவில் தமிழ் படத்தின் மிகப்பெரிய நடு வாரத்தின் கலெக்சன் : $474,000
இந்தியாவில் விஜய் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங்: ₹34 கோடி.
மெர்சல் படம் அமீர் கானின் டங்கலை விடவும், ஷாருக் கானின் Raees-ஐ விடவும் மிகப்பெரிய ஓப்பனிங்கை அமெரிக்காவில் பெற்றுள்ளது.
இருந்தாலும் ரஜினி படத்தை ஒருசில இடங்களில் மெர்சல் படம் முந்த முடியவில்லை. மெர்சல் இப்பொழுது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங்கில் இரண்டாம் இடந்தை பெற்றுள்ளது.
அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் இடம் பெற்றுள்ளது.
ரஜினியின் மிகப்பெரிய ஓப்பனிங் ரெக்கார்டை தமிழ்நாட்டில் மெர்சல் முறியடித்துள்ளதாக பல சினிமா வர்த்தக நபர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன ஆனால் என்னால் அவற்றை உறுதி படுத்த முடியவில்லை. என் கணக்கு படி ரஜினியின் கபாலி ₹23.5 கோடியும், விஜயின் மெர்சல் ₹22.5 கோடியும் பெற்றுள்ளது. நான் நம்பகமான தகவல் வந்ததும் உங்களுக்கு அப்டேட் செய்கிறேன்.
இனிமேலும் மெர்சல் வசூல் மழை பெய்யுமா எனபது படம் பார்த்தவர்களின் கருத்து மற்றும் பொதுவான மக்கள் காட்டும் ஆர்வத்தை பொறுத்து அமையும். படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்த்துள்ளதாகவும், குடும்பத்துடன் பார்க்க கூடியதாகவும் இருப்பதாக தகவல். பாஜக புண்ணியத்தால் மெர்சல் படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எப்படியோ விஜயின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
Thanks Forbes.com
0 திட்டுகள்:
திட்டுங்க.. ஆனா no bad words...