Tuesday, October 24, 2017

திருமணம் செய்து கொள்ளாத கனவு கன்னிகள்

சிலருக்கு அதிர்ஷ்டம் என்பது கூரையை பொத்துக்கொண்டு கொட்டும். அப்படி பட்ட அதிர்ஷ்டத்தின் மூலம் தொழில், புகழ், பணம் போன்ற வற்றை சம்பாதித்து கோடி கட்டி பரப்பார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு வாழ்க்கை சரியாக அமையாது.
ஒரு கால கட்டத்தில்(சிலர் இன்றளவும்) கனவு கன்னியாக சினிமாவில் கொடி கட்டி பறந்து வாழ்க்கை  சரியாக அமையாத சில நடிகைகளை பற்றி இங்கு பாப்போம்.

1. தபு
இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் இன்னும் சில படங்களில் நடித்தவர். 45 வயதான தபு இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உட்பட 50-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



2. சுஷ்மிதா சென்
1994-ல் Miss. Universe பட்டம் வென்ற சுஷ்மிதா சென் தமிழில் வெளியான ரட்சகன் படம் மூலம் திரையில் அறிமுகம் ஆனவர். 41 வயதான சுஷ்மிதா ஒரு பெண் குழந்தையை 2000-ம் ஆண்டு தத்து எடுத்து வளர்த்து வருகிறார். 30-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



3. ப்ரீத்தி ஜிந்தா
நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். Indian Premier League-ல் பங்கேற்றுள்ள பஞ்சாப் அணியின் சொந்தக்காரர். 42 வயதான ப்ரீத்தி பலமுறை காதலில் விழுந்துள்ளார். இருந்தபோதிலும்   இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



4. ஷோபனா
பரத நாட்டியத்தில் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்றுள்ளவர் நடிகை ஷோபனா. 80 மற்றும் 90-களில் பல படங்களில் நடித்த ஒரு முன்னணி நடிகை. 1970-ல் பிறந்த இவர் 200-க்கும் மேட்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணத்தில் ஏனோ நாட்டம் இல்லை. இதனாலேயே திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகின்றார்.



5. கௌசல்யா
37 வயதான கௌசல்யாவின் உண்மையான பெயர் நந்தினி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஹீரோயின், சகோதரி, அம்மா போன்ற வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் உயரமான நடிகையாக வலம் வந்தவர். சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் அவார்டு பெற்றுள்ளார். கர்நாடகாவில் பிறந்த கௌசல்யா இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்,



6.மல்லிகா ஷெராவத்
மிகவும் தைரியசாலியன மல்லிகா பல ஆண்களின் இதயங்களில் குடிகொண்ட இளவரசி என்றுதான் சொல்லவேண்டும். 39 வயதான மல்லிகா Bachelorette என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தன் வருங்கால கணவரை தேர்வு செய்ய முயன்றார். இருந்தாலும் மனம் கவர்ந்த ஆண் அவருக்கு சிக்க வில்லை.



7. ஊர்மிளா மடோன்கர்
90-களில் வலம் வந்த ஒரு அழகு பதுமை என்றே சொல்லவேண்டும். ரங்கீலா என்ற ஹிந்தி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர். செக்ஸி என்ற வார்த்தைக்கே அர்த்தமாக இருந்தவர். இந்தியன் படத்தில் உலக நாயகனோடு ஜோடி போட்டவர். ஒரு ஆணுடனான பந்தம் எனக்கு தேவை என்று எப்பொழுதுமே தோன்றியது இல்லை என்று சொன்னவர். 42 வயதான ஊர்மிளா இதுவரை திருமணம் செய்யாமலே இருக்கிறார்.



8.நமீதா
மச்சான்ஸ் நடிகையை பற்றி சொல்ல தேவை இல்லை. எங்கள் அண்ணாவில் மிகவும் ஸ்லிமாக இருந்தவர். யார் கண் பட்டது என்று தெரியவில்லை இப்போ ரொம்ப உப்பி பொய் உள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரிடமும் வாங்கி கட்டி கொண்டவர். 36 வயதான இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. சில நாட்களாக சரத் பாபுவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாக ஒரு தகவல். இதை இருவருமே மறுத்துள்ளனர்.


9. நக்மா
காதலனில் பிரபு தேவாவை உருகி உருகி காதலித்தவர். பாட்சாவில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தவர். தமிழ் நாடு இவர் பின்னால் இருந்தது ஒரு காலம். நாட்டாமையுடன் சில படங்களில் நடித்தத்தின் விளைவு சீக்கிரமே காணாமல் போய் விட்டார். இப்பொழுது காங்கிரஸ் கட்சியில் மகளிரணி  தலைவர் பொறுப்பில் உள்ளார். 42 வயதான இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.


10. கனகா
மாங்குயிலே பூங்குயிலே என்று ராமராஜுடன் டூயட் பாடியவர். ரஜினி, கமல், பிரபு என்று அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர்.43 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.




என்ன படித்து முடித்து விடீர்களா. அடுத்தது இவர்களில் யாரை திருமணம் செய்யலாம் என்று யோசிச்சிட்டு இருக்கிங்களா? உங்க சாய்ஸ கமெண்டில் தெரிய படுத்தலாமே!!

0 திட்டுகள்: