Wednesday, December 7, 2011

நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்....

என்னடா இவரு இப்படிப்பட்ட தலைப்பு வச்சிருக்காருன்னு யோசிக்கிரிங்களா??
நடிகர் சூர்யா அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்.... எதற்கு?
மேலே வாசிக்கவும்.

நடிகர் சூர்யா நடித்ததில் வெற்றி பெற்ற படங்கள் மிகவும் கம்மி தான்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக தான் தொடர் வெற்றி போடுகிறார்.
அதற்கு காரணம் சூர்யா அல்ல. சுர்யாவிற்காக மட்டுமே எந்த படமும் ஓடியதில்லை.
இருந்தாலும் அவர் படங்கள் எப்படி வெற்றி பெறுகிறது என்று பார்த்தால் அதற்கு
காரணங்கள் டைரக்டர் or திரைக்கதை or பாடல்கள் or நகைச்சுவை மட்டும் தான் காரணங்கள்.

மௌனம் பேசியதே, காக்க காக்க, நந்தா, அயன் போன்ற படங்களில் அனைத்தும் புதுமுக டைரக்டர்கள் தான்.
இதிலும் மௌனம் பேசியதே மட்டும் தான் அறிமுக இயக்குனர். மற்ற மூன்று படங்கள் அந்த இயக்குனர்களுக்கு இரண்டாம் படம்.
இந்த நான்கு படங்களும் அதில் இருந்த திரை கதைக்காக ஓடியவை. மேலே சொன்ன நான்கு படங்கள் தவிர சூர்யாவின் மற்ற வெற்றி படங்கள் அனைத்திலும் நல்ல திரைக்கதையும் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களும் தான்.

ஆகா சுர்யவிற்காக ஓடிய படங்களே இல்லை என்று சொல்லலாம்.

மாறாக விஜய் நடித்ததில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ், கில்லி, காவலன் தவிர அனைத்து வெற்றி படங்களிலும் அறிமுக இயக்குனர்கள் தான். போக்கிரி, வேலாயுதம், சிவகாசி, திருபாட்சி, வேட்டைக்காரன் மற்றும் பல
படங்கள் விஜய்காக மட்டுமே ஓடியவை. விஜய் பட தொகுப்பை இங்கே காணலாம்.
பல படங்கள் நல்ல திரைக்கதை இல்லாமல் அனுபவ இயக்குனர் இல்லாமல் வெற்றி பெற்றவை.

அஜித்தின் படங்களும் கிட்ட தட்ட விஜய் படங்கள் மாதிரி தான். அஜித்மற்றும் விஜய் இடையேயான
ஒப்பிட்டுக்கு என்னுடைய முந்தய பதிவுகளை பார்க்கவும்.

நல்ல திரைக்கதை இல்லை என்றால் சூர்யா படம் மிகப்பெரிய வெற்றி அடைவது கஷ்டம் தான்.
உதாரணமாக 'ஏழாம் அறிவு'.

இப்பொழுது உங்களுக்கே தெரிந்திருக்கும் சூர்யா எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.
அட இன்னுமா தெரியவில்லை அதாங்க 'மாஸ் ஹீரோ' என்ற அடைமொழிக்கு சரிப்பட்டு வரமாட்டார்.




2 திட்டுகள்:

ராஜா ராஜன் said...

விஜய் அஜித் ரேன்ஜ் வேற.
சூர்யா விக்ரம் கமல் வேற.
யார யாருகூட கம்பெயார் பண்றதுன்னு ஒரு வெவஸ்த வேணாமா?

நீங்க இதுக்கு எல்லாம் சரிபட்டு வர மாட்டீங்க.
எதுக்கு?
......அதாங்க ப்ளாக் எழுதுறதுக்கு.......

Unknown said...

@ராஜா ராஜன்

நீங்களாவது சரிப்பட்டு வருவிங்களா பாஸ்?

நான் கம்பேர் பண்ணினது 'மாஸ் ஹீரோ' என்ற அடைமொழிக்காக மட்டுமே.

அஜித், விஜய் நம்ம சல்மான், சாருக் மாதிரி.
சூர்யா ஆமிர்கான் மாதிரி தான்.
இவங்க 5 ஹிட் குடுத்தாலும் நம்ம மாஸ் ஹீரோஸ் ஒரே ஒரு ஹிட் குடுத்துஎல்லோரையும் முந்திருவாங்க வந்திருவாங்க பாஸ்.