Thursday, January 26, 2012

இளைய தளபதியின் சிறந்த தனி மனித குணங்கள்....


சென்ற பதிவில் தலயின் சிறந்த குணங்களை பார்த்தோம். இந்த பதிவில் எனக்கு தெரிந்த/பிடித்த இளைய தளபதி விஜயின் சிறந்த தனிமனித குணங்களை பார்ப்போம். தல/சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவை படிக்கும் போது விஜயை ஒரு நடிகராக(நடிகர் இல்லைன்னு எங்களுக்கு தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது) பார்க்காமல் தனிமனிதனாக(??) பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு அஜித் மற்றும் விஜயை பிடிக்கும். விஜயை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். காரணம் எனக்கிருக்கும் தமிழன் என்ற உணர்வு. தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் என் தன்மானம் சும்மா இருக்காது. விஜய் என்ற தமிழன் இணையதளங்களில், SMS-களில் தாக்கப்பட்ட போது தமிழ் உணர்வு என்னை விஜயை அதிகமாக நேசிக்க தூண்டியது.

விடா முயற்சி & உழைப்பு:
விஜய்க்கு அஜித், சூர்யா போல் அழகு கிடையாது. அவர்களை போல் சிறப்பாக நடிக்கவும் தெரியாது. அப்படி இருந்தும் அவர்களை விட முன்னணியில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி தான் காரணம். என்ன தான் அவரின் அப்பா ஆரம்பகாலத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் விடா முயற்சி, உழைப்பு தான். தொடர்ந்து தோல்வியானாலும் ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்தது விடா முயற்சியின் மற்றொரு உதாரணம்.

இன்வால்வ்மென்ட்/பொறுப்புணர்ச்சி:
தான் நடிக்கும் படத்தில் எந்த அளவுக்கு இன்வால்வ்மென்ட் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். படத்தின் பாடல்களை/இசையை தானே தேர்ந்தெடுப்பது அவரது இன்வால்வ்மெண்டை பறைசாற்றுகிறது. தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து தன்னுடைய பொறுப்பை உணர்த்து வேறு எந்த முயற்சியும்(அதாங்க வேற வேற கெட்அப்) எடுக்காமல் தன்னால் முடித்ததை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

எளிமை:
தான் பெரிய நடிகர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் எப்பொழுதும் எளிமையாகத்தான் இருப்பார். எந்த விழாவிற்கு சென்றாலும் கோட், சூட் இல்லாமல் சாதரணமாக தான் செல்வார். நிறைய பேச மாட்டார். நிறை குடம் நீர் தளும்பாது.

இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது:
மற்ற நடிகர் போல நடித்தோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் தான் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்று தெளிவாக இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது. (எனக்கும் விஜய் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. வந்தாலும் ஓட்டு போடமாட்டேன் அரசியல் அனுபவம் பெரும் வரை)

சுயநலத்தில் ஒரு பொதுநலம்:
தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சுயநலத்திற்காக தன் ரசிகர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தினாலும் அதன் மூலம் ஒரு சிலருக்கு உதவி செய்வது பொது நலமே. சுயநலத்திலும் ஒரு பொது நலம்.

அப்பா பிள்ளை:
இவ்வளவு பெரிய நடிகர் ஆனபிறகும் கூட தன்னுடைய அப்பா பேச்சை மறுக்காமல் அதன்படி நடப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்(சொந்தமாக யோசிக்க தெரியாதுன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது தெரியுது). 'எங்கள் வீட்டு பிள்ளை' இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறார்கள்.

டிரென்ட் செட்டர்:
எந்த ஒரு விசயமானாலும் தன்னை அடுத்தவர் ஃபலோவ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து தான் செய்கிறார். விஜய் எப்படி டிரென்ட் செட் பண்ணினார் என்று இங்கே படிக்கவும்.


Tuesday, January 24, 2012

நான் ரசித்த அஜித்தின் சிறந்த குணங்கள்

அஜித் ரசிகனாக இல்லாத போதும் அஜித்தின் ஒரு சில குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த குணங்கள் மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.

அழகான பெர்சனாலிட்டி:
வாழ்கையில் முன்னேற ஒருவருக்கு தேவைப்படுவது முதல் வாய்ப்பு. அப்படிப்பட்ட வாய்ப்பு சிபரிசிலோ(recommendation) அல்லது நாம் படித்த படிப்பினாலோ கிடைக்கலாம். ஆனால் தன்னுடைய வசீகர தோற்றத்தின் மூலமாக முதல் வாய்ப்பு கிடைக்க பெற்றவர் அஜித். இன்றைக்குள்ள தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே அழகான பெர்சனாலிட்டி...

தைரியம்:
தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் பட்டென்று வெளிப்படையாக கூறிவிடுவார்.
உதா: கலைஞர் முன்னிலையில் விழாவிற்கு வற்புறுத்தி அழைத்தது பற்றி பேசியது, ரசிகர் மன்றங்களை கலைத்தது, தமிழ் படத்தையே ரீமேக் செய்தது.

மனிதாபிமானம் மிக்கவர்:
அஜித் உண்மையிலேயே மனிதாபிமானம் மிக்கவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சரி சமமாக நடத்துமாறு கேட்டுள்ளார்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்:
மங்காத்தா படம் வெளிவருதில் இருந்த சிக்கலை போக்க இன்றைய முதல்வரை சந்திக்குமாறு கூறினார்கள். ஆனால் நடிக்க வேண்டியது மட்டும் தான் என்வேலை படம் வெளியிடுவது தயாரிப்பாளர் வேலை என்று உள்ளதை உள்ளபடி கூறினார்.

ஆசை அதிகம் இல்லாதவர்:
தனக்கு மாஸ் இருந்தாலும் மற்ற நடிகர்களை போல அதிக சம்பளம் மற்றும் ஏரியா ரைட்ஸ் எதுவும் கேட்காதவர். ஆசை அதிகம் இல்லாதவர் என்பதற்கு மற்றும் ஒரு காரணம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தால் அவர் மோட்டார் ரேஸில் கலந்து கொண்டிருக்க மாட்டார்.


தளபதி ரசிகர்களே கவலை வேண்டாம் அடுத்த பதிவு தளபதியை பற்றி தான். அதுவரையில் நீங்கள் எது சிறந்த குணம் என்று கருதுகிறீர்களோ அதை கமெண்ட்ஸில் தெரியப்படுத்தவும்...

Sunday, January 22, 2012

மேதை வெற்றியை தொடர்ந்து மாமேதை ஆங்கிலத்தில் : ஜேம்ஸ் கேமரூன்


மேதையின் மாபெரும்(!!) வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயராக காத்துகொண்டிருக்கும் அடுத்த படத்திற்காக தன்னை தயார் பண்ணிக்கொண்டிருந்த டவுசர் என்று செல்லமாக அழைக்கப்படும் மக்கள் நாயகன் ராமராஜன் லொள்ளு நேயர்களுக்கான பேட்டி என்றதும் முக மலர்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

இதோ மக்கள் நாயகனின் பேட்டி உங்களுக்காக.




நாம்: என்ன சார் ரொம்ப தீவிரமா ஏதோ பண்றீங்க போல
ம.நா: என்ன பண்றேனா? மேலே இருக்குற போட்டோவ பாத்தா தெரியலையா?

நாம்: ஒரு மறத்தமிழனான நீங்க தீவிரமா இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறீங்களே எதுக்கு சார்?
ம.நா: நம்ம கேமராமேன் சாரி ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட்ல அவதார்-2 படம் பண்ற கேப்ல நம்மள வச்சு ஒரு படம் பண்ணனும்னு ரொம்ப கெஞ்சி கேட்டார்.. அதுக்காக தான் என்னை தயார் பண்ணிட்டுருக்கேன்.

நாம்: அவருக்கு எப்படி உங்களபத்தி தெரிஞ்சது?
ம.நா: மேதை படம் ரிலீஸ் ஆனதும் இன்டர்நெட்ல அதிகம் அடிபட்ட படம் மேதை. அதுவுமில்லாம அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் எனக்கு தான் முதலிடம். ரஜினி, விஜய், அஜித்து டாப் 10-ல கூட வரமுடியல. நம்ம டிகார்பியோவுக்கு ரெண்டாவது இடம் தான். முதலிடம் கிடைச்சதால கேமரூனுக்கு என்ன வச்சு படம் எடுக்க ஆசை வந்து என்னை புக் பண்ணிட்டார்..

நாம்: அப்ப நம்ம பவர் ஸ்டார், சாம் அன்டேர்சன்?
ம.நா: அவங்களுக்கெல்லாம் ஏழாவது மற்றும் பத்தாவது இடம் தான்

நாம்: இந்த படத்துல என்ன மாதிரி ரோல் பண்றீங்க?
ம.நா: 'cow'பாய் ரோல் பண்றேன்

நாம்: படத்துக்கு பேரு வச்சாச்ச சார்
ம.நா: மாமேதை
நாம்: இந்த பேரை நீங்க தான் செலக்ட் பண்ணிங்களா?
ம.நா: நான் சொன்ன பேரு 'அம்மா'மேதை. கௌபாய் சம்பந்தபட்ட படமானதால் 'ம்ம்ம்மா'மேதை-னு வச்சுக்கலாம்னு கேமரூன் சொன்னாரு.. நாம தான் தீவிர அம்மாவின் தொண்டனாச்சே அதுவுமில்லாம பசு நேசன் என்பதாலும் கடைசில 'மா'மேதை-னு வச்சாச்சு

நாம்: மாமேதை மேதை படத்தின் இரண்டாம் பாகமா?
ம.நா: இல்லை இல்லை இது டோட்டலா வேற கதை

நாம்: படத்துல எதாவது பஞ்ச் டயலாக் உண்டா சார்?
ம.நா: ஆமா உண்டு "தர்மம் தலை காக்கும்... பட், டவுசர் தான் மானம் காக்கும்..."
நாம்: சூப்பர் சார் சூப்பர். கரகாட்டகாரனுக்கு அப்புறம் மேதைக்கு ஏன் இவளோ இடைவெளி?
ம.நா: கெரகம் நல்லா இருந்ததுனால கரகம் நல்லா ஓடுச்சு.. அதுக்கு அப்புறம் கெரகம் சரி இல்லை அதான் இந்த கேப்.

நாம்: ஒரு தமிழனான நீங்க ஹாலிவுட்ல எப்படி நடிக்க ஒத்துகிட்டிங்க
ம.நா: தமிழனுக்கு பாடம் சொல்லி தரனும் என்பதற்காக தான்

நாம்: பாடம் சொல்லி தர அளவுக்கு தமிழன் என்ன பண்ணினான்?
ம.நா: தமிழ் படத்துல இங்கிலீஷ் படத்துக்கு சமமா ஒரு சீன் வந்த ரசிக்குறதுக்கு பதிலா கிண்டல் பண்றாங்க. லாஜிக் இல்லாம இங்கிலீஷ்காரன் படம் எடுத்தா கைதட்டி ரசிக்குறாங்க.. அவங்களுக்கு எல்லாம் ஒரு நல்லா பாடம் சொல்லி தரனும் அதான்..
நாம்: விஜயகாந்த் நடிச்ச நரசிம்மா, வேலாயுதம் டிரெயின் சீன், 7-ம் அறிவு கிளைமாக்ஸ் இத பத்தி தமிழன் அடிக்குற கமெண்ட்ஸ் பத்தி சொல்றிங்களா
ம.நா: ஆமாம். மாமேதை இந்த மாதிரி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சாட்டை அடியாக இருக்கும்.

நாம்: சார் நமது வாசகர்களுக்காக மாமேதை படத்தின் போட்டோ தரமுடியுமா.
ம.நா: நீங்க மேதை படத்தின் வெற்றி விழாவிற்கு வாருங்கள் தருகிறேன்.

தமிழ்நாட்டு மக்களே நீங்கள் சீக்கிரம் திருந்திகொள்ளுங்கள் இல்லை என்றால் மாமேதை உங்களை திருத்த வருகிறார்.

Thursday, January 19, 2012

அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் - பாலியல் உறவு பற்றியது : இந்தியாவில்



நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்தியர்களாகிய நாம் செக்ஸ் பற்றி தான் நிறைய நேரம் யோசிக்கின்றோம். 
சமீபத்தில் இந்திய டுடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் சமீபத்தில் பாலியல் உறவு பற்றி ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் அதிர்ச்சி தரக்கூடியாத உள்ளது.
அவுட்லுக் 2011-ல் 30 மற்றும் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது. அதே சமயம் இந்திய டுடே 18 மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்டது.

அவுட்லுக்கின் சர்வே முடிவில் 45 வயதுக்குட்பட்டவர்களில் 94 சதவிகிதம் பேர் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாக உள்ளதாக கூறியுள்ளது.

அதற்கு மாறாக இந்திய டுடே 33 சதவிகித மனைவிகள் திருமணமாகிய சில வருடங்களிலே போர் அடிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 40.3 சதவிகித இந்தியர்கள் தங்களுடைய தற்போதைய செக்ஸ் வாழ்க்கை மிகவும் திருப்தியாகவும் 53.6 சதவிகிதம் பேர் திருப்தியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: மாறாக 48 சதவிகித கணவன்மார்கள் தாங்கள் திருப்தியாக உடலுறவு கொண்டது தனது மனைவியிடம் இல்லை என்றும், 49 சதவிகித மனைவிமார்கள் பொய்யான தலைவலி போன்ற காரணத்தை கூறி உடலுறவை விரும்புவதில்லையாம்.

இந்திய டுடே சர்வே: 66 சதவிகித கணவன்மார்கள் நீலப்படங்களை பார்ப்பதாகவும், அதில் 23 சதவிகிதம் பேர் கள்ளதொடர்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் 28 சதவிகித கணவன்மார்கள் ஒரு இரவு மட்டும் கள்ளதொடர்புக்கு தயாராக உள்ளதாகவும், 16 சதவிகிதம் பேர் மனைவியை பரிமாறிக்கொள்ளவும் (swaping) தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவுட்லுக் சர்வே: 33.4 சதவிகித ஜோடிகள் மாதத்திற்கு 11-லிருந்து 20 முறை உடலுவு வைத்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 32.1 சதவிகித ஜோடிகள் வாரமிருமுறையும் (சண்டேனா ரெண்டா??), 31.3 சதவிகித ஜோடிகள் வரம் ஒருமுறையும் உகந்ததாக தெரிவித்துள்ளனர்.

நடுத்தர வயதில் உள்ளவர்கள் தங்களின் இளமை காலத்தை விட இப்பொழுது நன்றாக என்ஜாய் பன்னுவதாகவும், 46 சதவிகிதம் பேர் அதே மாதிரி இருப்பதாகவும், 44 சதவிகிதம் பேர் முன்னை விட இப்பொழுது சுவாரசியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 70.8 சதவிகித ஜோடிகள் புதிது புதிதாக பரிசோதித்துக்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டு சர்வேயிலும் சிறிய நகரத்தில் உள்ளவர்கள் உடலுறவில் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளது.

அவுட்லுக் சர்வே: 23 சதவிகிதம் பேர் தங்களை விட வயது குறைந்தவர்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும், 12.4 சதவிகிதம் பேர் பிரபலங்களிடம் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் (வித்யா பாலன், சல்மான் கான் முன்னிலையில் உள்ளார்களாம்)

இந்திய டுடே சர்வே: சினிமா துறையில் உள்ளவர்கள் தான் மிகவும் கற்பனையில் வருபவர்களாம். 48 சதவிகித ஆண்கள் நடிகைகளை கற்பனை செய்வார்களாம்.

மேலும் 35.1 சதவிகிதம் பேர் ஆன்லைன் ஊடகங்களின் மூலம் அறிமுகமான நபரை சந்தித்துள்ளதாகவும் இதில் 58.3 சதவிகித சந்திப்பு படுக்கையறையில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாத கன்னி பெண்களில் 77 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும், திருமணமான பெண்களில் 26 சதவிகிதம் பேர் கருத்தடை மாத்திரை உபயோகித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

14 சதவிகித பெண்கள் கருகலைப்பு செய்துள்ளதாகவும் இதில் 39 சதவிகித பெண்கள் திருமணம் ஆகாதவர்கள்.

10 சதவிகித ஆண்களும் 5 சதவிகித பெண்களும் தங்களின் நெருக்கமான (கணவனோ, மனைவியோ அல்லாத) சொந்தங்களிடம் தகாத உறவு வைத்துள்ளர்கள்.

இதில் 26 சதவிகிதம் பேர் மாமா, சித்தப்பா, அத்தை, சித்தி, பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் உடலுறவு வைத்துள்ளர்கள்.

இந்திய டுடே சர்வே: 26 சதவிகிதம் பேர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ்ஸில் அனுபவம் பெற வேண்டும் என்றும் 17 சதவிகிதம் பேர் கன்னித்தன்மையை பற்றி கவலை படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

37 சதவிகித ஆண்களும், 12 சதவிகித பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.



திருமணம் நிச்சயிகப்பட்ட ஜோடிகளில் 25 சதவிகித ஜோடி திருமனத்திற்கு முன்னரே(இரு குடும்பத்திற்கும் தெரியாமல்) உடலுறவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்திய டுடே சர்வே: 37 சதவிகித ஆண்களும், 34 சதவிகித பெண்களும் செக்ஸ் சம்பந்தப்பட்ட போட்டோ/வீடியோ பார்ப்பதாகவும், இதில் 49 சதவிகித பெண்கள் தங்கள் துணையுடன் மட்டும் தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் 44 சதவிகித டெல்லிவாலாக்கள் டீன்ஏஜ் பருவத்திலேயே முதல் முறையாக உடலுறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காமசூத்ரா கலையை கண்டுபிச்ச நம்ம நாட்டுல இதெல்லாம்  சகஜமப்பா-னு நீங்க நினைக்குறது எனக்கு கேக்குது ..




நன்றி rediff.com

Wednesday, January 18, 2012

விஜய் வழியில் நான்: ரஜினி

ரஜினியின் சமீபத்திய செயல்பாடுகளை விஜயை பின்பற்றியே செய்கிறார்.

இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாடு அரசியலை விட தேசிய அரிசியலில் தான் மிகவும் ஆர்வம்.

இதற்கு உதாரணமாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பங்கேற்காதது மட்டுமின்றி, அன்னா ஹசாரே-வுக்கு ஆதரவு, ராகுல் காந்தி சந்திப்பு என அனைத்தையும் சொல்லலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் இளையதளபதியின் வழியில் தேசிய அரிசியலில் ஆர்வம் காட்டுகிறார். ரஜினியும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அன்னா ஹசாரே-வுக்கு மண்டபம் மற்றும் ஆதரவு வழங்கியது. மேலும் தேசிய நதிகளை இணைப்பதற்கு கோடிகளை அள்ளி கொட்டவும் தயாராக உள்ளார். ரஜினியின் செல்வாக்கு அணைத்து மாநிலங்களிலும் எந்திரன் படத்திற்கு அப்புறம் உயர்ந்துள்ளது.

மிக விரைவில் விஜயின் வழியில் தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளது என்று அறிவிப்பு ரஜினியிடமிருந்து வரலாம்.

Monday, January 16, 2012

சி.பி.செந்தில்/தமிழ் ஆதி என்ன வேலை, வெட்டி இல்லாதவரா?


கொஞ்ச நாளாகவே, இல்லை.. இல்லை.. ரொம்ப நாளாகவே பதிவுலகில் ஒரு டிரென்ட் வந்திருக்கு.
அது என்னவென்றால் தன்னிலை விளக்கம் தருவது.

ஒன்னுமில்லங்க மேட்டர் சிம்பிள் தான். அதாவது நாம ஸ்கூல்/காலேஜ்/ஆபீசுக்கு ஒரு ரெண்டு, மூணு நாள் போகலேன்னா உடனே நாம அடுத்த தடவை போகும் போது கேக்குற எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.

அனால் இந்த பதிவுலகில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு எந்த பதிவுமே போடாம அதுக்கு விளக்கம் தருவாங்களே பாருங்க.
"வேலை பளுவின் காரணமாக", "டைம் கிடைக்கலை", "டெட் லையனுக்குள்ள(செத்த சிங்கம் இல்ல deadline) ப்ராஜெக்ட் முடிக்கணும்".
இப்படி பல தரப்பட்ட காரணம் சொல்லுவாங்க.

ஏதோ இவங்க தான் ஆபீஸ தாங்கி நிறுத்துற மாதிரி. அப்ப தினமும் இரண்டு அல்லது மூன்று பதிவு போடுற சி.பி.செந்திலுக்கு வேற வேலையே கிடையாதா?
பதிவு போடுறது மட்டும் தானா அவருக்கு முழுநேர வேலை? கண்டிப்பாக இல்லை. எவ்வளவு வேலை இருந்தாலும் அவருடைய ரசிக கண்மணிகளுக்காக தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்குகிறார்.

அப்பாடக்கர் பதிவர்களே.. உங்களை பதிவு போடுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. நீங்கள் ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாக ஏன் பதிவு போடவில்லை என்று யாரும் கேட்க போவதுமில்லை. அப்படி இருக்கும் போது நீங்களாக எதற்கு "As I am suffering from project deadline/work load kindly grant me one week leave"-னு தன்னிலை விளக்கம் தருகிறீர்கள்.

உங்களால் முடிந்தால் நம்ம "தமிழ் ஆதி" மாதிரி வெட்டி பதிவாவது போடுங்கள் உங்கள் ரசிக கண்மணிகளுக்காக.

சி.பி அண்ணன் மற்றும் ஆதி அண்ணன் அவர்களே.. உங்களிடம் கேட்காமல் உங்களை பற்றி இந்த பதிவில் கூறியதற்கு என்னை மன்னிக்கவும். நீங்கள் தான் எங்களை போன்ற பதிவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியவர்கள். தவறாமல் தினமும் இரண்டு மூன்று பதிவு போடும் உங்கள் கடமை எனக்கு பிடித்திருகிறது.


டிஸ்கி: பச்சை பச்சையாக திட்டி விட்டு பச்சை கலரில் மன்னிப்பு கேட்டால் போதுமா?

தமிழ் பதிவுகளில் ஆங்கிலம் படும் பாடு...

தமிழ் பண்டிகை அன்று இந்த பதிவை போடுவது தான் சரியாக இருக்குமென்று நினைக்கிறன்.

தமிழ் பதிவுகளில் அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப பதிவுகளில் ஆங்கில மொழி எந்த அளவுக்கு பாடு படிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்...

தமிழ் பதிவர்களின் தமிழ் ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன் ஆனால் அதே சமயத்தில் ஆங்கில வார்த்தையை நேரடியாக தமிழாக்கம் செய்வது எவ்வளவு கேலிக்குரியது, எவ்வளவு வேதனைக்குரியது. இந்த மாதிரியான மொழிமாற்றம் பெரும்பாலும் தொழில்நுட்ப பதிவுகளில் நாம் அதிகமாக காணலாம்.

அப்படி உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் சிலவற்றை நாம் இங்கு காணலாம்.(இது சாம்பிள் மட்டுமே)

ஆங்கில வார்த்தைநேரடி தமிழ் வார்த்தை
VirtualBoxகற்பனையாக்கப்பெட்டி
Java Runtime Environment(JRE)ஜாவா நிகழ்நேர சூழல்
desktop முகத்திரை
Mobile stationநகர் நிலையம்
trensceiverசெலுத்துப்பெறுவி

இங்கே மேலே குறிப்பிட்ட ஆங்கில வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நேரடியாக தமிழாக்கம் செய்து தமிழ் வாக்கியத்தை அமைக்கிறார்கள். இது எவ்வளவு வேதைனைக்குரியது. உதாரணமாக நகர் நிலையம்(Mobile station/tower). இது மொபைல் போனில் இருந்து வரும் அழைப்பு/தகவலை பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு டவர். அனால் தமிழாக்கத்தில் கொடுக்கபட்டுள்ள சொல்லிற்கு(நகர் நிலையம்) அர்த்தமே வேறு..

இதே மாதிரி தமிழ் வார்த்தை/அல்லது வாக்கியத்தை அர்த்தமற்ற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல் உங்களுக்கு கோபம் வருமா வரதா?
உதா: கொட்டை வடிநீர் என்பதை ஆங்கிலத்தில் 'Nut filtered water' என்று மொழி பெயர்த்தால் அதில் எந்த அர்த்தமும் இருக்காது.
3 idots படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு 3 முட்டாள்கள் என்ற பெயரை விட நண்பன் என்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பதிவர்களே இனியாவது அர்த்தமற்ற தமிழாக்கத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, January 15, 2012

ஹாட்ரிக்: வெற்றி vs தோல்வி யார் யாருக்கு?

ஹாட்ரிக் என்றாலே அனைவருக்கும் தெரியும் "தொடர்ச்சியாக மூன்று முறை சாதிப்பது/வெற்றி பெறுவது/தோல்வி அடைவது".

பொதுவாக தொடர் தோல்வி அடைந்தால் அதை ஹாட்ரிக் என்று சொல்லுவதில்லை.
ஆனால் நாம் யார் யாரெல்லாம் ஹாட்ரிக் வெற்றியை/தோல்வியை கொடுத்திருகிறார்கள் என்று பார்ப்போம்.

இளைய தளபதி: கடந்த மூன்று படங்களாக தொடர் வெற்றியை பெற்றதன் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார். சினிமாவில் ஹாட்ரிக் நிகழ்த்துவது அரிதான விசயமே. பொதுவாக ஹாட்ரிக் வெற்றி ஒரு சில இயக்குனர்களுக்கு மட்டுமே. நடிகர்களுக்கு அது மிகவும் அரிதான விசயமே. எந்த எந்த நடிகர் ஹாட்ரிக் வெற்றி பெற்றார்கள் என்பதை பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணி: கடந்த மூன்று டெஸ்ட் ஆட்டங்களிலும் தொடர் தோல்வியை பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு இது ஒன்றும் புதிது அல்ல. ஹாட்ரிக் வெற்றியை அடைவது தான் இந்திய அணிக்கு சிரமம்.

எந்த தமிழ் ஹீரோ ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்?

ஹீரோ எத்தனை முறை படங்கள்
விஜய் 3
  • காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன்
  • குஷி, பிரியமானவளே, பிரெண்ட்ஸ்
  • காவலன், லாயுதம், நண்பன்,துப்பாக்கி
சூர்யா 2
  • மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன்
  • வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம்
தனுஷ் 2
  • துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி
  • பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன்
விக்ரம் 1
  • தில், காசி, ஜெமினி
அஜித் 1
  • வீரம், என்னை அறிந்தால், வேதாளம்



ரஜினி, கமலை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் ஒரு தடவை கூட ஹாட்ரிக் அடிக்கவில்லை.

உழவர் திருநாள் அர்த்தமற்றது: வீடியோ ஆதாரம்


இன்றைய சூழலில் உழவர் திருநாள் அர்த்தமற்றது என்று ஒரு பிரபல நடிகர் விளக்கம் அளிக்கிறார்.
அவர் கூறும் காரணங்கள் அனைத்தும் முற்றிலும் உண்மையே.
பொங்கல் வாழ்த்து/உழவர் திருநாளின் உண்மையான நோக்கம் இப்பொழுது இல்லை என்று கூறுகிறார்.

நீங்களும் பாருங்களேன்.



Monday, January 9, 2012

துபாய் பாண்டியும் டவுசர் பாண்டியும்

துபாய் பாண்டி: வணக்கம் டவுசரு....
டவுசர் பாண்டி: ஆமா இவரு பெரிய இவரு.. நீரு போட்டுருக்குறது முக்கா டவுசர் தானே
துபாய் பாண்டி: அடே இதுக்கு பேரு துபாய்ல பெர்முடாஸ் டா... டவுசர் கிவுசர்னு சொன்ன செருப்பு பிஞ்சுடும்...
டவுசர் பாண்டி: என்னது செருப்பு பிஞ்சுடுமா (கோவத்தில் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்)
துபாய் பாண்டி: அட நம்ம மாச்சான் தானான்னு சொன்னா... கோவத்த பாரு... (உடனே டவுசர் பாண்டி திட்டுறதை நிறுத்துகிறார்)


துபாய் பாண்டி: ஆமா மச்சான் தமிழ்நாட்டு மக்களுக்கு செலக்டிவ் அம்னீசியவாமே?
டவுசர் பாண்டி: ஆமா மச்சான்.. விஜயகாந்த் முல்லை பெரியார் பிரச்சனைக்கு குரல் குடுத்தால் திட்டுறாங்க.. அதே பிரச்சனைக்கு விஜய் குரல் குடுக்கலேன்னா திட்டுறாங்க.. இத தான் செலக்டிவ் அம்னீசியானு சொல்றியா மச்சான்?
துபாய் பாண்டி: இது மட்டுமில்ல மாப்ள.. வெள்ளக்காரன் டெர்மினேட்டர்-னு படம் எடுத்தா அதுல வர ஹீரோ/வில்லன் பண்றத பாத்து வாய பொளந்துட்டு பாப்பாங்க. இதே நம்ம விஜயகாந்த் நரசிம்மா படத்துல ஷாக் ட்ரீட்மென்ட் எடுக்குரப்போ ட்ரான்ஸ்பார்மர் வெடிச்சா சிரிக்குறாங்க...
டவுசர் பாண்டி: சரியா சொன்னீரு மச்சான்... ரஜினிய அரசியலுக்கு வா வா-னு சொல்லுறது... ஆனா அரசியலில் இருக்குற விஜயகாந்துக்கு ஒட்டு போட மாட்டாங்க. இவங்க தான் தமிழ் நாட்டு மக்கள்.

துபாய் பாண்டி: ஆமா மாப்ள நம்மூர்ல போன வருஷம் சினிமா எப்படி இருந்துச்சு?
டவுசர் பாண்டி: போன வருஷம் தல/தளபதிக்கு குரு உச்சத்துல இருந்தாரு.. போன வருசத்தின் வெற்றியால் தல No1, தளபதி No2, சூர்யா No3, விக்ரம் No4 இடத்தை பிடிச்சிருக்காங்க...




துபாய் பாண்டி: ஆமா மாப்ள நீ அரசியல் எல்லாம் பேசமாட்டியா?
டவுசர் பாண்டி: அட போப்பா.. ஆனானப்பட்ட அப்படக்கர்னு தலைப்பு வச்சுருக்கிற பதிவரே அத பத்தி பேசமாட்டுறாரு நமக்கு எதுக்கு வம்பு...


துபாய் பாண்டி: போன மேட்ச்லயும் சச்சின் சதம் அடிக்காம போயிட்டாரே மாப்ள..
டவுசர் பாண்டி: அவர் சதம் அடிக்காம இருக்குறது தான் அவருக்கு நல்லது.. அவர் சதம் அடிச்ச உடனே எல்லாரும் அவரை கிரிக்கெட்ல இருந்து ரிட்டையர் ஆகணும்னு சொல்லுவாங்க.. அதனால அடிக்காம இருந்தா இத சாக்கு வச்சு இன்னும் கொஞ்சம் வருஷம் அவருடைய ஆட்டத்த நாம பாக்கலாம்.
துபாய் பாண்டி: நீ சொல்றதும் சரிதான் மாப்ள. "God never plays cricket again"-னு கேக்குறதுக்கு கஷ்டமா தான் இருக்கும்..


டவுசர் பாண்டி: ஆமா பொங்கலுக்கு நீரு இங்க இருப்பீரா இல்ல துபாய் போய்டுவீரா??
துபாய் பாண்டி: இங்க தான் மாப்ள.. நண்பன் படம் பாத்துட்டு தான் துபாய்க்கு கிளம்பனும்...
டவுசர் பாண்டி: நண்பன் படத்த பத்தி எதாச்சும் மேட்டர் இருக்கா??
துபாய் பாண்டி: இல்லாமலா.. படம் நல்லா வந்துருக்காம்.. ஆனா நெட்ல இருக்குற சில படுபாவி பதிவர்கள் படம் பாத்துட்டு ஒரிஜினல் ஹிந்தி படம் அளவுக்கு இல்லன்னு சொல்லுவாங்கனு எதிர் பாக்குறாங்க.
டவுசர் பாண்டி: அது எப்படிப்பா ஒரிஜினல் ஒரிஜினல் தான்... எந்த ரீமேக்கும் ஒரிஜினல் படத்த விட நல்லா வந்திருக்கு.. முதல்ல வந்த படத்துக்கு தான் மவுசு அதிகம்.


உடனே பஸ் வர டவுசர் பாண்டி "மச்சான் பஸ் வந்துருச்சு சீக்கிரம் ஏறி எனக்கு இடம் போட்டு வையிப்பா"
அதுக்கு துபாய் பாண்டி "இதுக்கு பேரு துபாய்-ல குப்ப வண்டி.. பஸ்ஸாம்-ல பஸ்"
டவுசர் பாண்டி மறுபடியும் கோவத்துடன் திட்ட ஆரம்பிக்குறார்.


Thursday, January 5, 2012

தல அஜித் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்


தல அஜித் எதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்? இந்த பதிவை பற்றிய முழு தகவல்கள் அறிந்து கொள்ள நாளை இதே நேரம் இந்த இணையதளத்திற்கு வருகை தாருங்கள்.

அதுவரையில் நீங்கள் யோசித்து எதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கமெண்ட்ஸில் தெரிவிக்கவும்.


பாபாவை முந்திய ராஜபாட்டை...



தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ நடித்த படத்தில் மிகவும் மோசமான தோல்வியை தழுவிய சினிமா ரஜினி நடித்த பாபா என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலைமை சென்ற வருடத்தின் இறுதி வரை தான். இப்படிப்பட்ட பெயரை தட்டிச்சென்று விட்டது விக்ரம் நடித்த ராஜபாட்டை திரைப்படம்.
மிகவும் மோசமாக தோல்வி அடைந்த படம் என்ற பெயர் இப்பொழுது ராஜபாட்டை திரைபடத்திற்கு தான்.

Tuesday, January 3, 2012

காதலியை எளிதாக பிக் அப் செய்வது எப்படி???

காதலியை எளிதாக பிக் அப் செய்வது எப்படி???


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்............
நண்பர்களே என்னோட வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பவும் உண்டு.........