சென்ற பதிவில் தலயின் சிறந்த குணங்களை பார்த்தோம். இந்த பதிவில் எனக்கு தெரிந்த/பிடித்த இளைய தளபதி விஜயின் சிறந்த தனிமனித குணங்களை பார்ப்போம். தல/சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவை படிக்கும் போது விஜயை ஒரு நடிகராக(நடிகர் இல்லைன்னு எங்களுக்கு தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது) பார்க்காமல் தனிமனிதனாக(??) பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு அஜித் மற்றும் விஜயை பிடிக்கும். விஜயை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். காரணம் எனக்கிருக்கும் தமிழன் என்ற உணர்வு. தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் என் தன்மானம் சும்மா இருக்காது. விஜய் என்ற தமிழன் இணையதளங்களில், SMS-களில் தாக்கப்பட்ட போது தமிழ் உணர்வு என்னை விஜயை அதிகமாக நேசிக்க தூண்டியது.
விடா முயற்சி & உழைப்பு:
விஜய்க்கு அஜித், சூர்யா போல் அழகு கிடையாது. அவர்களை போல் சிறப்பாக நடிக்கவும் தெரியாது. அப்படி இருந்தும் அவர்களை விட முன்னணியில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி தான் காரணம். என்ன தான் அவரின் அப்பா ஆரம்பகாலத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் விடா முயற்சி, உழைப்பு தான். தொடர்ந்து தோல்வியானாலும் ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்தது விடா முயற்சியின் மற்றொரு உதாரணம்.
இன்வால்வ்மென்ட்/பொறுப்புணர்ச்சி:
தான் நடிக்கும் படத்தில் எந்த அளவுக்கு இன்வால்வ்மென்ட் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். படத்தின் பாடல்களை/இசையை தானே தேர்ந்தெடுப்பது அவரது இன்வால்வ்மெண்டை பறைசாற்றுகிறது. தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து தன்னுடைய பொறுப்பை உணர்த்து வேறு எந்த முயற்சியும்(அதாங்க வேற வேற கெட்அப்) எடுக்காமல் தன்னால் முடித்ததை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.
எளிமை:
தான் பெரிய நடிகர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் எப்பொழுதும் எளிமையாகத்தான் இருப்பார். எந்த விழாவிற்கு சென்றாலும் கோட், சூட் இல்லாமல் சாதரணமாக தான் செல்வார். நிறைய பேச மாட்டார். நிறை குடம் நீர் தளும்பாது.
இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது:
மற்ற நடிகர் போல நடித்தோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் தான் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்று தெளிவாக இலக்கு நிர்ணயித்து அதற்காக உழைப்பது. (எனக்கும் விஜய் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. வந்தாலும் ஓட்டு போடமாட்டேன் அரசியல் அனுபவம் பெரும் வரை)
சுயநலத்தில் ஒரு பொதுநலம்:
தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற சுயநலத்திற்காக தன் ரசிகர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தினாலும் அதன் மூலம் ஒரு சிலருக்கு உதவி செய்வது பொது நலமே. சுயநலத்திலும் ஒரு பொது நலம்.
அப்பா பிள்ளை:
இவ்வளவு பெரிய நடிகர் ஆனபிறகும் கூட தன்னுடைய அப்பா பேச்சை மறுக்காமல் அதன்படி நடப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்(சொந்தமாக யோசிக்க தெரியாதுன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது தெரியுது). 'எங்கள் வீட்டு பிள்ளை' இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறார்கள்.
டிரென்ட் செட்டர்:
எந்த ஒரு விசயமானாலும் தன்னை அடுத்தவர் ஃபலோவ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து தான் செய்கிறார். விஜய் எப்படி டிரென்ட் செட் பண்ணினார் என்று இங்கே படிக்கவும்.