தளபதி டிரென்ட் செட்டர்(trendsetter) என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா?
இங்கே அவரைப்பற்றி எப்படி டிரென்ட் செட்டராக இருக்கிறார் என்று பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரின் ஸ்டைல், பஞ்ச் டயலாக் பற்றி அனைவர்க்கும் தெரியும்.
10 or 15 வருடங்களுக்கு முன்பு அவர் நடிக்கும் போது அவருடன் நடித்த எந்த நடிகரும்
அவருடைய ஸ்டைலை or நடிப்பை or பஞ்ச் டயலாக்கை யாரும் பின்பற்றவில்லை
என்பது உண்மையே.
இப்போது தளபதி மேட்டருக்கு வருவோம். எந்த காலகட்டத்தில் எப்படி டிரென்ட்
செட் பண்ணினார் என்று பார்ப்போம்.
ஃப்ரேம் இல்லாத கண்ணாடி:
இளைய தளபதி 'நினைத்தேன் வந்தாய்' படத்தில் ஃப்ரேம் இல்லாத சிறிய அளவிலான
கண்ணாடி அணிந்து நடித்திருப்பார். இந்த வகை கண்ணாடி இந்த படத்தின் ரிலீஸ்க்கு
அப்புறம் ரொம்ப பிரபலம் ஆனது.
Cross body bag (உடம்புக்கு குறுக்காக அணியும் பை):
இளைய தளபதி 'சச்சின்' படத்தில் உடம்புக்கு குறுக்காக அணியும் பை அணிந்து நடித்திருப்பார்.
இந்த வகை பை இன்றளவும் கல்லூரி மாணவர்களிடையே ரொம்ப பிரபலம்.
ஆக்சன் மூவீஸ்:
தளபதி திருமலை, கில்லி, திருபாச்சி, சிவகாசி என்று ஆரம்பித்த டிரென்ட்டுக்கு இன்று அனைத்து
நடிகர்களும் அடிமை.
குத்து பாட்டு:
விஜய் படத்தில் தொடர்ச்சியாக குத்து பாட்டு இருக்க்கும். இதுவே இப்பொழுது எல்லா
நடிகர்களும் பாலோ செய்கிறார்கள்.
ஹீரோவுக்கான ஒபெனிங் பாடல்:
இதற்கு ரஜினி முன்னோடி என்றாலும் விஜய்க்கு அப்புறம் தான் டிரெண்டாக செட் ஆனது.
ரீமிக்ஸ் பாடல்கள்:
70, 80 வருடங்களில் வந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்வதை தொடங்கி வைத்தவர் விஜய் தான்.
பாடல்களில் கலர் கலராய் உடை அணிவது:
தன்னோட கலருக்கு பொருத்தம் இல்லாத கலர் கலராய் உடைகளை பாடல்களில் அணிந்து
நடித்தவர் தளபதி தான். அஜித் கூட ஆழ்வார், பரமசிவன் படத்தில் அதை ட்ரை பண்ணி இருப்பார்.
பஞ்ச் டயலாக்:
இந்த டிரெண்டுக்கு ரஜினி தான் மூல காரணம். ஆனால் விஜய் அவரது படங்களில் யூஸ்
பண்ணிய பிறகே இன்றைய ஹீரோக்கள் பாலோ பண்ணினார்கள்.
ரீமேக் மூவிஸ்:
இந்த டிரென்ட் செட் பண்ணியவர் விஜய் என்று யாருக்கும் சொல்ல தேவை இல்லை.
கடைசியாக
பெயருக்கு முன்னால் போடும் பட்டம்:
சின்ன தளபதி, புரட்சி தளபதி, குட்டி தளபதி என்று விஜயை பார்த்து பட்டம் சூட்டி கொள்கிறார்கள்.