மேதையின் மாபெரும்(!!) வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயராக காத்துகொண்டிருக்கும் அடுத்த படத்திற்காக தன்னை தயார் பண்ணிக்கொண்டிருந்த டவுசர் என்று செல்லமாக அழைக்கப்படும் மக்கள் நாயகன் ராமராஜன் லொள்ளு நேயர்களுக்கான பேட்டி என்றதும் முக மலர்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.
இதோ மக்கள் நாயகனின் பேட்டி உங்களுக்காக.
நாம்: என்ன சார் ரொம்ப தீவிரமா ஏதோ பண்றீங்க போல
ம.நா: என்ன பண்றேனா? மேலே இருக்குற போட்டோவ பாத்தா தெரியலையா?
நாம்: ஒரு மறத்தமிழனான நீங்க தீவிரமா இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறீங்களே எதுக்கு சார்?
ம.நா: நம்ம கேமராமேன் சாரி ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட்ல அவதார்-2 படம் பண்ற கேப்ல நம்மள வச்சு ஒரு படம் பண்ணனும்னு ரொம்ப கெஞ்சி கேட்டார்.. அதுக்காக தான் என்னை தயார் பண்ணிட்டுருக்கேன்.
நாம்: அவருக்கு எப்படி உங்களபத்தி தெரிஞ்சது?
ம.நா: மேதை படம் ரிலீஸ் ஆனதும் இன்டர்நெட்ல அதிகம் அடிபட்ட படம் மேதை. அதுவுமில்லாம அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் எனக்கு தான் முதலிடம். ரஜினி, விஜய், அஜித்து டாப் 10-ல கூட வரமுடியல. நம்ம டிகார்பியோவுக்கு ரெண்டாவது இடம் தான். முதலிடம் கிடைச்சதால கேமரூனுக்கு என்ன வச்சு படம் எடுக்க ஆசை வந்து என்னை புக் பண்ணிட்டார்..
நாம்: அப்ப நம்ம பவர் ஸ்டார், சாம் அன்டேர்சன்?
ம.நா: அவங்களுக்கெல்லாம் ஏழாவது மற்றும் பத்தாவது இடம் தான்
நாம்: இந்த படத்துல என்ன மாதிரி ரோல் பண்றீங்க?
ம.நா: 'cow'பாய் ரோல் பண்றேன்
நாம்: படத்துக்கு பேரு வச்சாச்ச சார்
ம.நா: மாமேதை
நாம்: இந்த பேரை நீங்க தான் செலக்ட் பண்ணிங்களா?
ம.நா: நான் சொன்ன பேரு 'அம்மா'மேதை. கௌபாய் சம்பந்தபட்ட படமானதால் 'ம்ம்ம்மா'மேதை-னு வச்சுக்கலாம்னு கேமரூன் சொன்னாரு.. நாம தான் தீவிர அம்மாவின் தொண்டனாச்சே அதுவுமில்லாம பசு நேசன் என்பதாலும் கடைசில 'மா'மேதை-னு வச்சாச்சு
நாம்: மாமேதை மேதை படத்தின் இரண்டாம் பாகமா?
ம.நா: இல்லை இல்லை இது டோட்டலா வேற கதை
நாம்: படத்துல எதாவது பஞ்ச் டயலாக் உண்டா சார்?
ம.நா: ஆமா உண்டு "தர்மம் தலை காக்கும்... பட், டவுசர் தான் மானம் காக்கும்..."
நாம்: சூப்பர் சார் சூப்பர். கரகாட்டகாரனுக்கு அப்புறம் மேதைக்கு ஏன் இவளோ இடைவெளி?
ம.நா: கெரகம் நல்லா இருந்ததுனால கரகம் நல்லா ஓடுச்சு.. அதுக்கு அப்புறம் கெரகம் சரி இல்லை அதான் இந்த கேப்.
நாம்: ஒரு தமிழனான நீங்க ஹாலிவுட்ல எப்படி நடிக்க ஒத்துகிட்டிங்க
ம.நா: தமிழனுக்கு பாடம் சொல்லி தரனும் என்பதற்காக தான்
நாம்: பாடம் சொல்லி தர அளவுக்கு தமிழன் என்ன பண்ணினான்?
ம.நா: தமிழ் படத்துல இங்கிலீஷ் படத்துக்கு சமமா ஒரு சீன் வந்த ரசிக்குறதுக்கு பதிலா கிண்டல் பண்றாங்க. லாஜிக் இல்லாம இங்கிலீஷ்காரன் படம் எடுத்தா கைதட்டி ரசிக்குறாங்க.. அவங்களுக்கு எல்லாம் ஒரு நல்லா பாடம் சொல்லி தரனும் அதான்..
நாம்: விஜயகாந்த் நடிச்ச நரசிம்மா, வேலாயுதம் டிரெயின் சீன், 7-ம் அறிவு கிளைமாக்ஸ் இத பத்தி தமிழன் அடிக்குற கமெண்ட்ஸ் பத்தி சொல்றிங்களா
ம.நா: ஆமாம். மாமேதை இந்த மாதிரி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சாட்டை அடியாக இருக்கும்.
நாம்: சார் நமது வாசகர்களுக்காக மாமேதை படத்தின் போட்டோ தரமுடியுமா.
ம.நா: நீங்க மேதை படத்தின் வெற்றி விழாவிற்கு வாருங்கள் தருகிறேன்.
தமிழ்நாட்டு மக்களே நீங்கள் சீக்கிரம் திருந்திகொள்ளுங்கள் இல்லை என்றால் மாமேதை உங்களை திருத்த வருகிறார்.
0 திட்டுகள்:
திட்டுங்க.. ஆனா no bad words...