Thursday, November 17, 2011

இளைய தளபதி ஒரு டிரென்ட் செட்டர்(trendsetter) - ஓர் அலசல்

தளபதி டிரென்ட் செட்டர்(trendsetter) என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா?
இங்கே அவரைப்பற்றி எப்படி டிரென்ட் செட்டராக இருக்கிறார் என்று பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரின் ஸ்டைல், பஞ்ச் டயலாக் பற்றி அனைவர்க்கும் தெரியும்.
10 or 15 வருடங்களுக்கு முன்பு அவர் நடிக்கும் போது அவருடன் நடித்த எந்த நடிகரும் 
அவருடைய ஸ்டைலை or நடிப்பை or பஞ்ச் டயலாக்கை யாரும் பின்பற்றவில்லை
என்பது உண்மையே.

இப்போது தளபதி மேட்டருக்கு வருவோம். எந்த காலகட்டத்தில் எப்படி டிரென்ட் 
செட் பண்ணினார் என்று பார்ப்போம்.

ஃப்ரேம் இல்லாத கண்ணாடி:
     இளைய தளபதி 'நினைத்தேன் வந்தாய்' படத்தில் ஃப்ரேம் இல்லாத சிறிய அளவிலான 
கண்ணாடி அணிந்து நடித்திருப்பார். இந்த வகை கண்ணாடி இந்த படத்தின் ரிலீஸ்க்கு 
அப்புறம் ரொம்ப பிரபலம் ஆனது.

Cross body bag (உடம்புக்கு குறுக்காக அணியும் பை):
     இளைய தளபதி 'சச்சின்' படத்தில் உடம்புக்கு குறுக்காக அணியும் பை அணிந்து நடித்திருப்பார். 
இந்த வகை பை இன்றளவும் கல்லூரி மாணவர்களிடையே  ரொம்ப பிரபலம்.

ஆக்சன் மூவீஸ்:
    தளபதி திருமலை, கில்லி, திருபாச்சி, சிவகாசி என்று ஆரம்பித்த டிரென்ட்டுக்கு இன்று அனைத்து
நடிகர்களும் அடிமை.

குத்து பாட்டு:
     விஜய் படத்தில் தொடர்ச்சியாக குத்து பாட்டு இருக்க்கும். இதுவே இப்பொழுது எல்லா
நடிகர்களும் பாலோ செய்கிறார்கள்.

ஹீரோவுக்கான ஒபெனிங் பாடல்:
    இதற்கு ரஜினி முன்னோடி என்றாலும் விஜய்க்கு அப்புறம் தான் டிரெண்டாக செட் ஆனது.

ரீமிக்ஸ் பாடல்கள்:
    70, 80 வருடங்களில் வந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்வதை தொடங்கி வைத்தவர் விஜய் தான்.

பாடல்களில் கலர் கலராய் உடை அணிவது:
    தன்னோட கலருக்கு பொருத்தம் இல்லாத கலர் கலராய் உடைகளை பாடல்களில் அணிந்து
நடித்தவர் தளபதி தான். அஜித் கூட ஆழ்வார், பரமசிவன் படத்தில் அதை ட்ரை பண்ணி இருப்பார்.

பஞ்ச் டயலாக்:
    இந்த டிரெண்டுக்கு ரஜினி தான் மூல காரணம். ஆனால் விஜய் அவரது படங்களில் யூஸ் 
பண்ணிய பிறகே இன்றைய ஹீரோக்கள் பாலோ பண்ணினார்கள்.

ரீமேக் மூவிஸ்:
   இந்த டிரென்ட் செட் பண்ணியவர் விஜய் என்று யாருக்கும் சொல்ல தேவை இல்லை.

கடைசியாக
பெயருக்கு முன்னால் போடும் பட்டம்:
     சின்ன தளபதி, புரட்சி தளபதி, குட்டி தளபதி என்று விஜயை பார்த்து பட்டம் சூட்டி கொள்கிறார்கள்.

2 திட்டுகள்:

"ராஜா" said...

//ஃப்ரேம் இல்லாத கண்ணாடி:

தல காதல் கோட்டையிலேயே ஃபிரேம் இல்லாத சின்ன கண்ணாடி அணிந்து வருவார்...

//Cross body bag (உடம்புக்கு குறுக்காக அணியும் பை):

தல காதல் மன்னன் படத்திலேயே இப்படியான பை போட்டுக்கொண்டு வருவார் .

//ஆக்சன் மூவீஸ்:

தல அமர்க்களம் , தீனா , சிட்டிசன் என்று நடித்ததை பார்த்துத்தான் தளபதி பகவதி என்று சூடு போட்டு கொண்டிருப்பார் ..

//குத்து பாட்டு:

தல காதல் கோடையிலேயே குத்து பாட்டு வைத்திருப்பார்

//ஹீரோவுக்கான ஒபெனிங் பாடல்:

தீனா வத்திக்குச்சி பத்திக்காதுடா என்று தல பாடிய அதே நேரத்தில் சூரியா வையும் ரமேஷ் கண்ணாவையும் கட்டி பிடித்து கொண்டு நட்பை பற்றி பாடி கொண்டிருந்தவர் இளைய தளபதி

//ரீமிக்ஸ் பாடல்கள்:

நியூ படத்தில்தான் முதல் ரீமிக்ஸ் பாடல் வந்தது .. அது தல நடித்திருக்க வேண்டிய படம் ..


//பாடல்களில் கலர் கலராய் உடை அணிவது:

இதை உருவாக்கியது ராமராஜன்

//பஞ்ச் டயலாக்:

பாஸ் நீங்க இல்தக்கா சையா ன்னு பிநாத்திக்கிடு இ ருந்தப்பவே தீம் ம்யூசிக்கோட பஞ்ச் டயலாக் பேசுணவங்க நாங்க ...

கடைசி இரண்டு விஷயங்கள் சொன்னீர்களே அதில் உங்காளை அடித்து கொள்ள ஆளே கிடையாது

Unknown said...

@"ராஜா"

உங்க தல அத போட்டாரு இத போட்டாரு சொல்றிங்களே? அவரு போட்ட எதையுமே மக்களோ மற்ற ஹீரோக்களோ ஃபாலோவ் பண்ணின மாதிரி தெரியலையே.