Tuesday, January 24, 2012

நான் ரசித்த அஜித்தின் சிறந்த குணங்கள்

அஜித் ரசிகனாக இல்லாத போதும் அஜித்தின் ஒரு சில குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த குணங்கள் மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.

அழகான பெர்சனாலிட்டி:
வாழ்கையில் முன்னேற ஒருவருக்கு தேவைப்படுவது முதல் வாய்ப்பு. அப்படிப்பட்ட வாய்ப்பு சிபரிசிலோ(recommendation) அல்லது நாம் படித்த படிப்பினாலோ கிடைக்கலாம். ஆனால் தன்னுடைய வசீகர தோற்றத்தின் மூலமாக முதல் வாய்ப்பு கிடைக்க பெற்றவர் அஜித். இன்றைக்குள்ள தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே அழகான பெர்சனாலிட்டி...

தைரியம்:
தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் பட்டென்று வெளிப்படையாக கூறிவிடுவார்.
உதா: கலைஞர் முன்னிலையில் விழாவிற்கு வற்புறுத்தி அழைத்தது பற்றி பேசியது, ரசிகர் மன்றங்களை கலைத்தது, தமிழ் படத்தையே ரீமேக் செய்தது.

மனிதாபிமானம் மிக்கவர்:
அஜித் உண்மையிலேயே மனிதாபிமானம் மிக்கவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சரி சமமாக நடத்துமாறு கேட்டுள்ளார்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்:
மங்காத்தா படம் வெளிவருதில் இருந்த சிக்கலை போக்க இன்றைய முதல்வரை சந்திக்குமாறு கூறினார்கள். ஆனால் நடிக்க வேண்டியது மட்டும் தான் என்வேலை படம் வெளியிடுவது தயாரிப்பாளர் வேலை என்று உள்ளதை உள்ளபடி கூறினார்.

ஆசை அதிகம் இல்லாதவர்:
தனக்கு மாஸ் இருந்தாலும் மற்ற நடிகர்களை போல அதிக சம்பளம் மற்றும் ஏரியா ரைட்ஸ் எதுவும் கேட்காதவர். ஆசை அதிகம் இல்லாதவர் என்பதற்கு மற்றும் ஒரு காரணம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தால் அவர் மோட்டார் ரேஸில் கலந்து கொண்டிருக்க மாட்டார்.


தளபதி ரசிகர்களே கவலை வேண்டாம் அடுத்த பதிவு தளபதியை பற்றி தான். அதுவரையில் நீங்கள் எது சிறந்த குணம் என்று கருதுகிறீர்களோ அதை கமெண்ட்ஸில் தெரியப்படுத்தவும்...

1 திட்டுகள்:

கடம்பவன குயில் said...

தலைக்கு நிகர் தலைதான். தலையோட தைரியமும் உள்ளொன்று வைத்து புறமொன்றுபேசாமையுமே அவரின் பலம்.

அறிமுகமான புதிதில் கைதூக்கிவிட சினிமாப்பின்னணிகொண்ட குடும்ப நபர்கள் யாரும் இல்லாமல் தன் சுயமுயற்சியால் முன்னுக்குவந்த அவரின் திறமைதான் எனக்கு அவரிடம் பிடித்தது.

அழகான பெர்சனாலிட்டியை வைத்து யாரும் சினிபீல்டில் நிலைத்து நின்றுவிடமுடியாது. ஆனால் அஜித்தின் திறமையே இன்றும் அவரை மாஸ் ஹீரோவாக வைத்திருக்கிறது.