நீங்கள் படிக்கவில்லை என்றால் உங்களுக்காக கீழே.
கரு: மாரியாத்தா கோவில் கூழ் அண்டாவை ஆட்டைய போடுவது
Cast:
அஜித்: சஸ்பெண்டு செய்யப்பட்ட சமையல்காரர்
அர்ஜுன்: தலைமை சமையல்காரர்(chief cook)
பிரேம்ஜி: மாரியாத்தா கோவிலில் பிட்சை எடுக்கும் பிச்சைகாரர்
மற்றும் பலர்.
படம் ஆரம்பிக்கும் போது அஜித் raymond கோட் சூட் போட்டுகொண்டு ஒரு கல்யாணத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அனைவரையும் அடித்து ஒருவரை காப்பாற்றுகிறார். (காப்பாற்றபட்டவர் மாரியாத்தா கோவில் தர்மகர்த்தாவின் வேலையாள்). சமையல் செய்யும் போது அடிதடியில் இறங்கியதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
அது மார்கழி மாதம் என்பதால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாரியாத்தா கோவிலில் கூழ் உத்துகிரார்கள். அப்பொழுது அங்கு வரும் ஒரு 7star ஹோட்டல் அதிபர் கூழை சுவைக்கிறார். அவருக்கு அதன் சுவை மிகவும் பிடித்து போகவே சமையல்காரரான அஜித்தை அழைத்து கூழ் பண்ணி தர முடியுமா என்கிறார். ஒரு அண்டாவிற்கு 10 கோடி ரூபாய் விலை பேசுகிறார்.
கூழ் சமைக்க தெரியாத அஜித் மாரியாத்தா கோவில் கூழ் அண்டாவை ஆட்டைய போட பிளான் பண்ணுகிறார்.
சில நாட்கள் கழித்து அவர் கோவில் தர்மகர்த்தாவை சந்திக்கிறார். சந்திப்பதற்கு முன்னர் அஜித் தர்மகர்த்தா-வின் பெண்ணை காதலிக்கிறார்.
காதலிக்கும் போது அவர்கள்
கூழ் கூழ் கூழ் உன்னை தேடி அலைந்தேன்..................என்ற டூயட் பாடலை பாடுகிறார்கள்.
ஒருநாள் மாரியாத்தா கோவிலுக்கு செல்லும் போது மூன்று நபர்கள் அங்கு பிச்சை எடுத்துக்கும் பிரேம்ஜியை இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். பின் தொடரும் அஜித்துக்கு அப்பொழுது தான் தெரிகிறது அவர்களும் கூழ் அண்டாவை ஆட்டைய போட பிளான் பண்ணுகிறார்கள் என்று.
உடனே அஜித்
"சிவாஜி படத்துல ரஜினி அடிச்சா cool......
ஆனா இந்த தல அடிச்சா கூழ்"
அப்படினு டயலாக் பேசிக்கொண்டே அவர்கள் முன்னாடி தோன்றுகிறார். அஜித் அவர்களிடம் எதற்காக பிச்சைகார பிரேம்ஜியை இந்த ஆட்டத்தில் சேர்த்தீர்கள் என்கிறார். அதற்கு பிரேம்ஜி "இன்பர்மேசன் இஸ் வெல்த்" அப்டின்னு பாய்ஸ் பட செந்தில் டயலாக் பேசிக்கொண்டே தான் வைத்திருக்கும் ஐபேட்-ஐ ஆன் செய்து எந்த கோவிலில் எப்பொழுது கூழ் ஊற்றுகிறார்கள் என்று படித்து சொல்கிறார். உடனே அஜித் பிரேம்ஜியின் முதுகில் தட்டிகுடுக்கிறார். உடனே பிரேம்ஜி "மச்சி ஒப்பன் தி பாட்டில்" என்றதும் குத்து பாடல் ஆரம்பம் ஆகிறது.
"உப்பு கருவாடு காச்சி வச்ச கூழு... ஊட்டி விட நீ போதும் எனக்கு.
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்து விட தோணுதடி
எனக்கு.................."
இந்த பாடலை கேட்டதும் chief குக் அர்ஜுனுக்கு கோபம் வருகிறது. அது எப்படி முதல்வன் படத்தில் நான் பாடிய பாடலை அஜித் உல்டா பண்ணலாம் என்று. அஜித்தை பலி வாங்குவேன் என்று சபதம் எடுக்கிறார்.
அனைத்து கோவில்களுக்கும் சென்று கூழை ஆட்டைய போடுவதற்கு நிறைய ஆட்கள் தேவைப்படுமே என்று யோசிக்கும் போது பிரேம்ஜி சொல்கிறார் "எல்லா கோவிலுக்கும் சென்று திருடுவதை விட எல்லா கோவிலுக்கும் சப்ளை செய்யும் குடோனில் இருக்கும் கண்டெய்னரில் இருந்து எளிதாக இருக்கும் ஆட்களை வைத்தே அடிக்கலாம்" என்கிறார். ஐடியா நன்றாக இருக்கவே அதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.
அதன்படி ஓடும் கண்டெய்னரில் இருக்கும் அண்டாவில் ஓட்டை போட்டு ஒரு பைப் மூலமாக வேறொரு அண்டாவுக்கு கூழை ட்ரான்ஸ்பர் செய்கிறார்கள்.
அப்பொழுது அங்கு அர்ஜுன் வருகிறார். அவரை பார்த்ததும் அனைவரும் பயப்படுகிறார்கள். பிரேம்ஜி பீதியில் யூரின் போகிறார்.
உடனே அஜித்
"மூக்குல சளி ஒட்டுனா கிளைமேட் cool....என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார். இதை கேட்டதும் அர்ஜுன் தன்னோட கிளாஸ்மேட் தான் அஜித் என்று உணர்கிறார். இருவரும் "நண்பேண்டா" என்று கட்டி அணைக்கிறார்கள்.
பட் மீசையில் ஒட்டுனா அது கூழ்"
படம் முடிகிறது.
0 திட்டுகள்:
திட்டுங்க.. ஆனா no bad words...