Tuesday, December 27, 2011

அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க : பயனுள்ள தகவல்


இண்டர்ன்ட் வசதி இல்லாத சமயத்தில் எப்படி அவரசமாக SMS மூலமாக தகவல் பெறுவது என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.
இந்த பதிவில் இன்டர்நெட் வசதி இருந்தாலும் எப்படி தடை செய்யப்பட்ட தளங்களை பார்வை இடுவது என்பது பற்றி பார்ப்போம்.

இப்பொழுது கிட்டத்தட்ட பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் பெரும்பாலானோர் இன்டர்நெட் வசதியுள்ள டேட்டா பிளான் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இந்த டேட்டா பிளான் குறைந்த விலையில் கிடைப்பதில்லை. மாதந்தோறும் இதற்காக நாம் செலுத்தும் தொகை கொஞ்சம் அதிகம் தான்.
இதற்காக வீட்டில் பிராட்பேண்ட் வசதி செய்து இணையத்தில் உலா வருவோம், இணைய தளத்தை பார்வை இடுவோம். அலுவகலத்தில் இருக்கும் போது அங்கு இருக்ககூடிய இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி இணையத்தில் தேவையான தகவல்களை பெறுவோம்.

ஆனால் கிட்டதட்ட அனைத்து அலுவலகங்களிலும் ஈமெயில், பேஸ்புக், கூகிள்+, ஆர்குட், ட்விட்டர் மற்றும் சில பல தளங்கள் தடை செய்யப்பட்டிருக்கும். இப்படி தடை செய்யப்பட்ட தளங்களை எப்படி பார்வை இடுவது? இதற்கான ட்ரிக்கை இங்கு பார்ப்போம்.

Opera Mini browser என்ற மொபைல் போனில் பயன்படுத்த கூடிய இணைய உலாவியின் demo(simulator) பதிப்பை நாம் உபயோகிக்கும் பிரவ்சர்சில்(IE, chrome, Firefox, Opera browser) இயக்குவதன் மூலம் தடை செய்யப்பட்ட தளங்களை பார்வை இடலாம்.

இந்த opera mini உலாவி இரண்டு வெவ்வேறு பதிப்பாக(2 versions) கிடைக்கின்றது. இந்த இரண்டு பதிப்பில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உபயோகிக்கலாம். நாம் இந்த இரண்டு பதிப்பையும் எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.

1. Opera Mini 6.5
இந்த பதிவு(version) மிகவும் நவீனபடுத்தப்பட்டது. அனைத்து தளங்களையும் மற்ற உலாவியில் பார்ப்பது போன்றே பார்க்கலாம்.
இதை உபயோகித்து பார்க்க பின்வரும் வலை முகவரியை சொடுக்கவும். http://www.opera.com/developer/tools/mini/ அல்லது http://demo.opera-mini.net/public/index.html


இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு உலாவி உங்கள் திரையில் தோன்றும். இந்த உலாவியில் www என்று கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நீங்கள் செல்ல வேண்டிய தளத்தின் முகவரியை குடுக்கவும் (நீங்கள் www என்ற இடத்தில் கிளிக் செய்த உடன் உங்கள் திரையில் கீ-போர்டு தோன்றும். நீங்கள் அதை பயன்படுத்தலாம் அல்லது கணினியில் உள்ள கீ-போர்டை கொண்டு டைப் செய்யலாம்). முகவரியை கொடுத்த பின்பு "என்டர்" கீயையோ அல்லது "Go" பட்டனையோ அழுத்தவும்.






கீழ்க்கண்ட error ஸ்க்ரீன் வந்தால் உங்கள் கம்பெனி proxy செட்டிங்க்ஸ்சை சரி பார்க்கவும்...




proxy செட்டிங்க்ஸ்சை சரி பார்க்க
a. b.
c.    d.



அதன் பின்னர் proxy டைப் மாற்ற

a. b.
c.    d.
e.


இப்பொழுது நீங்கள் gmail தளத்தை பார்க்க விரும்பினால் www.gmail.com என்று டைப் செய்து உங்கள் அக்கௌன்ட் டீட்டைல்சை குடுத்து லாகின் செய்தால் கீழே உள்ளது போன்று உங்கள் திரையில் தோன்றும்.(உங்கள் கணக்காளர் பெயரிலோ அல்லது பாஸ்வோர்டிலோ நம்பர் இருந்தால் அதை டைப் செய்யாமல் திரையில் தோன்றும் கீ-போர்டு மூலமாக டைப் செய்யவும்).









நீங்கள் gmail தளத்தை முழுவதுமாக மற்ற உலாவியில் பார்ப்பது போன்று வேண்டும் என்றால் basic html வியுவிற்கு மாற்றவும்.







2. Opera Mini 4.2
இந்த பதிவு(version) மேலே பார்த்த பதிவு போல் நவீனப்படுத்தபடவில்லை. ஆனாலும் அனைத்து தளங்களையும் இதில் பார்க்கலாம்.
இதை உபயோகித்து பார்க்க பின்வரும் வலை முகவரியை சொடுக்கவும். http://demo.opera-mini.net/demo.html


இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்ற ஒரு உலாவி உங்கள் திரையில் தோன்றும்.

மேலே கூறியபடியே இதிலும் proxy செட்டிங்க்ஸ்சை மாற்றி கொள்ளவும்.



இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது போல் உங்களுக்கு சரி வர இயங்கவில்லை என்றால் தெளிவாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் முடிந்தவரையில் உங்களுக்கு உதவுகிறேன்.

என்ஜாய்!!!









2 திட்டுகள்:

சி.பி.செந்தில்குமார் said...

பயனுள்ள தகவல். இனி யூஸ் பண்ணிக்குறேன் பகிர்வுக்கு நன்றி

Unknown said...

opera mini 6.5-ன் புதிய பதிப்பு சரியாக இயங்குவதில்லை அதனால் opera mini 4.2-வை பயன்படுத்துங்கள்.