Sunday, December 18, 2011

ரஜினி நினைத்திருந்தால் தி.மு.க மடிந்து புல் பூண்டு முளைத்திருக்கும் - கருணாஸ்



நாட்டில் ஒருவரை பாராட்ட வேண்டும் என்பதற்காக அடுத்தவரை குறை சொல்வது ஃபேசன் ஆகி விட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகவும் அதிகம்.

இப்படித்தான் கடந்த வாரம் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கருணாஸ் என்ற வாய் துடுக்கு நிறைந்த நகைச்சுவை நடிகர் மிகவும் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

அவர் ரஜினியை பாராட்டிய நேரத்தை விட மற்ற நடிகர்களை விமர்சித்து பேசிய நேரம் தான் அதிகம். ரஜினி அரசியலுக்கு வருவதில் அவருக்கு இல்லாத அக்கறை இவருக்கு என்ன? ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் அவரின் ரசிகர்களுக்கு ஏன் அவ்வளவு ஆர்வம்? ஏனென்றால் ரஜினியின் பெயரை சொல்லி அவர்களும் சம்பாதிக்க தான். விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர்களுக்கு கிடைத்த பதவி, மரியாதை இவற்றை கண்டு பொறுக்க முடியாதவர்கள் தான் ரஜினியை தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால் அவருக்கு கிடைக்க போகும் நெருக்கடிகள் ஏராளம். வருமான வரித்துறை, தனிப்பட்ட மனித தாக்குதல் போன்றவற்றில் இருந்து தப்பிப்பது சுலபம் அல்ல.

விஜயகாந்த் விசயத்தில் இதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அவர் நல்லவரோ கெட்டவரோ அது நமக்கு தேவை இல்லை. ஆனால் அரசியலுக்கு வந்தது முதல் அவர் இழந்தது ஏராளம். சொத்து, மானம் மரியாதை அத்தனையும் இழந்திருக்கிறார்.

என்னடா பதிவின் தலைப்பிற்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைகிறீர்களா? இதோ விசயத்திற்கு வருவோம்.
ரஜினி விழாவில் கருணாஸ் கீழ் கண்டவாறு கூறியிருக்கிறார்.

"ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதினால் தான் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவராக இருக்கிறாராம்". ஒருவேளை அவர் சொல்லியபடியே ரஜினி அரசியலில் இருந்திருந்தால் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது. அப்படி என்றால் தி.மு.க-வின் நிலைமை? அந்த கட்சி மண்ணோடு மண்ணாகி இந்நேரம் அந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கும்.

ஆக தி.மு.க கட்சி தான் ரஜினிக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறது

0 திட்டுகள்: