Monday, December 12, 2011

திருட்டு VCD-க்கு காரணம் ரஜினி, கமல்??

சினிமாவ நம்பி பலபேரோட பொழப்பு ஓடுது.
சினிமாவ பாத்து பலபேரோட பொழப்பு ஓடுது.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நம் ஹீரோ அப்படி என்ன தான் நடித்திருக்கிறார் என்று படம் பார்ப்பதில் நம் அனைவருக்குமே ஒரு ஆவல் உண்டு.
ஏதோ திருட்டு VCD(DVD) சமாச்சாரத்துக்கு மக்கள் மட்டுமே காரணம் என்று இந்த சினிமாக்காரர்கள் புலம்புகின்றனர்.
இதில் 10% தான் உண்மை. மக்கள் மட்டும் காரணம் இல்லை மக்களும் தான் காரணம்.

இப்பொழுது திருட்டு VCD மேட்டருக்கு வருவோம்.

திருட்டு VCD வாங்குவதினால் இது மக்களிடம் இருந்து தான் ஆரம்பிகின்றது. இதில் அவர்களுக்கு இரண்டு மனநிலை.
நம்ம பணத்தை திருட்டு குடுப்பதா அல்லது அடுத்தவன் பணத்தை திருடுவதா என்று? இன்று சராசரியாக நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க குறைத்து 500 ரூபாய் தேவை. (டிக்கெட் 300, பார்கிங் -50, puff/பாப்கார்ன்/ட்ரிங்க்ஸ் 150). இது பகல் கொள்ளை தான்.
500 ரூபாய் திருட்டு கொடுப்பதா இல்லை 30 ரூபாய் செலவு செய்து திருட்டு VCD வாங்குவதா என்றால் சராசரி நடுத்தர வர்க்கம் இராண்டாவது சாய்ஸ்-ஐ தான் விரும்புவர்.

எதற்காக தியேட்டரில் பகல் கொள்ளை அடிக்கிறார்கள்? அவர்கள் விநியோகஸ்தர்களிடம் நிறைய பணம் கொடுத்து தான் படப்பெட்டியை வாங்குகிறார்கள்.
இதில் விநியோகஸ்தருக்கோ இலாபம் கம்மி தான். இப்படி அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி திரை இட்டால் டிக்கெட் விலையும், ஸ்நாக்ஸ் விலையும் தாறுமாறாக தான் இருக்கும்.

எதற்காக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். தயாரிப்பாளர் இலாபம் கருதி அதிக விலைக்கு விற்றாக வேண்டி இருக்கிறது. தயாரிப்பாளர் ஒன்றும் அதிகமான இலாபம் எதிபர்ப்பதில்லை. எந்த ஒரு தயாரிப்பாளரும் ஹீரோவின் சம்பளத்தை விட கொஞ்சம் அதிகம் இலாபம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
பின்ன என்ன தன்கிட்ட வேலை செய்யும் ஹீரோவை விட முதலாளிக்கு அதிகமாக இலாபம் இருக்க வேண்டும் என்பது நியாயமே.

இப்பொழுதெல்லாம் ஹீரோவின் சம்பளமே ஒரு படத்தின் பட்ஜெட்டில் பெரும் பங்கு வகுக்குகிறது. இதற்கு மேலே ஃபாரின், பைவ் ஸ்டார் ஹோட்டல், பிசினஸ் கிளாஸ் ட்ராவல், லொட்டு லொசுக்கு..

MGR, சிவாஜி காலத்திலெல்லாம் இப்போது போல் சம்பளம் இல்லை. என் அறிவுக்கு எட்டியவரை இந்த அதிகபடியான சம்பளம் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனதில் இருந்து தான். ரஜினியின் இன்றைய சம்பளம் ஒரு நடுத்தர IT கம்பெனியின் வருமானத்திற்கு நிகரானது. ரஜினி அளவுக்கு கமலுக்கு வர்த்தகம் இல்லாவிட்டாலும் சமகால நடிகன் என்பதால் தானும் ரஜினி அளவுக்கு சம்பளம் எதிர் பார்க்கிறார். இவர்களைதான் மற்ற ஹீரோக்களும் பின் பற்றுகிறார்கள்.
இவர்கள் யாரும் தயாரிப்பாளரை நினைத்து பார்ப்பதில்லை.

எப்படி விலைவாசிக்கு பெட்ரோலின் விலை ஏற்றம் காரணமோ அப்படிதான் திருட்டு VCD-க்கு ரஜினி, கமல் தான் காரணம்.

வெளி இடங்களில் தன்னை ரொம்பவும் எளிமையாக காட்டிகொள்ளும் சூப்பர் ஸ்டார் பணத்தாசையை விட்டு குறைந்த சம்பளித்தில் நடிக்க வந்தால் தமிழ் திரையுலகம் சுடர் விட்டு எரியும். முன் வருவாரா சூப்பர் ஸ்டார்?

0 திட்டுகள்: