Thursday, December 15, 2011

"ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை" - ரஜினி



ரஜினியின் ஸ்பெசாலிட்டி அவருடைய பஞ்ச் டயலாக்...
அந்த பஞ்ச் டயலாக்கின் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மையான அர்த்தம் சற்று அதிர்ச்சி தருவதாகவே உள்ளது.
ரஜினியின் பஞ்ச் டயலாக் அனைத்தும் அவருடைய சுய நலத்தையே காட்டுகின்றது.

பஞ்ச் டயலாக்கும் அதன் உள்ளருத்தமும்...

பஞ்ச்: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டாக வருவேன்
உள்ளருத்தம்: அவரு வருவாராங்குறது அவருக்கே தெரியாது. அப்புறம் எப்படி வருவார்.. இந்த டயலாக்கை சொல்லி சொல்லியே தமிழ் ரசிகர்களின் மனதில் ஆசை உண்டாக்கி விட்டு விடுவது தான் ரஜினியின் பாலிசி.. அதை நம்பி அவர் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஒரு விழாவை ஏற்படுத்தினால் அதில் கலந்து கொள்ள கூட இவர் வரமாட்டார். கேட்டால் மேற்கண்ட பஞ்ச் டயலாக்கை சொல்லுவார்.. தமிழனுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரியல...

பஞ்ச்: பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்குளா தான் வரும்
உள்ளருத்தம்: இவரு படம் ரிலீஸ் ஆச்சுன கூட்டம் கூட்டமா ரசிகர்கள் வருவாங்க. அப்போ அவர்களை அறிவு கெட்டபன்றி என்று சொல்கிறாரா?இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரசிகர்கள் கூட்டம் கூட்டமா வந்தார்களே... இவர்கள் பன்றிகளா? இவரு தமிழனுக்காக சிங்கமாக சிங்குளாக எந்த பிரச்சினைக்காக குரல் குடுத்திருகிறாரா?

பஞ்ச்: rich are getting richer poor are getting poorer
உள்ளருத்தம்: இவரு மட்டும் படத்துக்கு படம் பல மடங்கு சம்பளம் அதிகமாக வாங்குவாரு. அப்போ பணக்காரன் மேலும் பணக்காரனா தான் ஆவான். இவரு படத்த பாக்குற நடுத்தர அடித்தட்டு மக்கள் மேலும் ஏழையா தான் ஆவாங்க.

பஞ்ச்: கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்கு முதலாளி... கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு முதலாளி
உள்ளருத்தம்: இத எல்லாம் கேட்டு நாம காசு சேர்த்து வைக்க கூடாது. ஆனால் அவரு மட்டும் சேர்த்து வைப்பார். இவருக்கு இப்போ முதலாளி காசு தான்.

பஞ்ச்: சாப்பிட்டது வயித்துலயே தங்கிட்டா உடம்பு கெட்டுடும் அதே மாதிரி சம்பாதிச்சத நீயே வச்சுக்கிட்டா நாடு கெட்டுடும்
உள்ளருத்தம்: இவரு இவருக்கே செலவு பண்ண மாட்டாரு (கேட்டால் சிம்ப்ளிசிட்டியாம்).. மத்தவங்களுக்கும் பண்ண மாட்டாரு. நாடு கெட்டு போனதுக்கு இவரும் ஒரு காரணம்.

பஞ்ச்: அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கெடையாது
உள்ளருத்தம்: இந்த பஞ்ச் டயலாக்கை கேட்டு நாமலாம் அதிகமா ஆசைப்பட கூடாது. ஆனால் இவரு மட்டும் அதிகமா ஆசைப்படுவார். கோடி கொடியை சம்பாதிப்பார்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இவரு சிம்ப்ளிசிட்டினு காட்டுவதற்காக சாதாரண உடை, செருப்பு தான் பயன்படுத்துகிறார். சாதாரணமான மனிதனுக்கு எதற்கு அசாதாரணமான சம்பளம். வெளிப்பார்வைக்கு தான் சிம்பிள். உள்ளுக்குள்ளே பேராசை பிடித்தவர் தான்.

7 திட்டுகள்:

subra said...

poddu thaakku talaiva ,nii aambala talaiva.

mahe said...

re ail than

KAYALVIZHI said...

no one can be a liar like this mean creature.He is a male chauvinist.non stop smoker.drunkard.worst womanizer.devil preaching Bible.
we are idiotic idiots to worship him like god.

Unknown said...

....fill any bad words in this gap. enda ipdi vayiru erinju saagaringa. avara kora sollalana ungaluku thookam varadha..? pongada poi polapugala parungada. pikkali thanama paesikitu. ungalaku jalra adikaravangaloda commentsa mattum podama indha commenta ambalaiya irundha podu. illana veranu artham...

Unknown said...

@Unknown

அண்ணே நீங்க பேர் சொல்லாத கமண்டரா இருந்தா கூட உங்க கமெண்ட்ஸ் பதிவு செய்யும்.
பேட் வோர்ட்ஸ், சம்மந்தம் இல்லாத கமெண்ட்ஸ் மட்டும் தான் ரிமோவ் செய்யப்படும்.
பாராட்டுரவங்கள விட திட்டுறவங்க தான் எனக்கு பிடிக்கும்.

anbhooo said...

pallu irukaravan pattttani saapduraaan.... illladhavan sapppittudhan irukkkanum....rajni sir... vaery nice human being... namakku yedhukkkunnnae idhelllam? polaaapa paapom... vaaangha...

Unknown said...

@anbhooo

பல்லு இருக்கிறவன் பாட்டணி சாப்பிடட்டும் தப்பு இல்ல. ஆனா பல்லு இல்லாதவனுக்கு அட்வைஸ் பண்ணாம சாப்பிடட்டும்.